அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் மொத்தம் 196 மாணவர்கள் தேர்வு எழுதினர், இதில் 87% (170/196) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 13% (26) மாணவர்களின் +2 வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில் அவர்களும் மறு தேர்வு எழுதி தங்களது கல்வியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- எஸ். அகமது அஸ்ரப் 503 முதலிடம்
- எச். முகமது பஹிம் 472 இரண்டாமிடம்
- டி. ஆசிக் 463 மூன்றாமிடம்
மாணவர்கள் கவனத்திற்கு :-
தேர்வு முடிவில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், ஸ்கேன் செய்யப்பட்டுள்ள தங்கள் விடைத்ததாள் நகலை கேட்டுப்பெற்று, அதனை ஆய்வு செய்து கூடுதல் மதிப்பெண் பெற முடியும் என்று கருதினால், மறுகூட்டல்/ மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும், தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் வரும் ஜூன்/ஜுலை மாதத்தில் நடைபெறும் சிறப்புத் துணைத் தேர்வில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படும். ஒரு முழு கல்வியாண்டு வீணாகாமல், இதில் தேர்ச்சி பெற்று இந்த ஆண்டிலேலே உயர்கல்வியைத் தொடர முடியும்.
I appreciate the humor in your analysis! For additional info, visit: FIND OUT MORE. What do you think?