மார்ச்-ல் நடைபெற்ற 2023 கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (மே 8ம் தேதி) காலை 9.30 மணி அளவில் வெளியிடப்படவுள்ளது.
தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்ததேதி/ மாதம்/ வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge.tn.gov.in
என்ற இணையதள முகவரி வாயிலாக தேர்வு முடிவுகளை காணலாம்.
மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், அரசுத் தேர்வுகள் இயக்கத்தின் இணையதளமான https:// www.dge.tn.gov.in/ வாயிலாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
மேலும், தேர்வு முடிவில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், ஸ்கேன் செய்யப்பட்டுள்ள தங்கள் விடைத்ததாள் நகலை கேட்டுப்பெற்று, அதனை ஆய்வு செய்து கூடுதல் மதிப்பெண் பெற முடியும் என்று கருதினால், மறுகூட்டல்/ மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும், தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் வரும் ஜூன்/ஜுலை மாதத்தில் நடைபெறும் சிறப்புத் துணைத் தேர்வில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படும். ஒரு முழு கல்வியாண்டு வீணாகாமல், இதில் தேர்ச்சி பெற்று இந்த ஆண்டிலேலே உயர்கல்வியைத் தொடர முடியும்.



Fantastic insights! Your perspective is very refreshing. For more details on this topic, visit: EXPLORE FURTHER. What do others think?
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article. https://accounts.binance.info/es-AR/register?ref=UT2YTZSU