ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு நடத்தக்கூடிய கல்வி வழிகாட்டி முகாமினை அடுத்து மாணவர்களுக்கு தொடர்ச்சியான உயர் கல்வி வழிகாட்டுதல் முகாம் வருகிற 29.04.2023 அன்று காலை 9.30 மணிக்கு ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெற உள்ள கல்வி வழிகாட்டி முகாமில் 9 முதல் 12 வரை படிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொள்ள அழைக்கின்றார்கள்.
கல்வி வழிகாட்டி குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில்
அரசு அலுவலர்கள்
வழக்கறிஞர்கள்
IT பணியாளர்கள்
மருத்துவர்கள்
ஆடிட்டர்கள்
பொறியியலாளர்கள்
ஊடகவியலாளர்கள் மற்றும்
துறை சார்ந்த வல்லுநர்கள் இடம் பெற்றுள்ளார்கள்.
மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதலை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வந்த பிறகு என்ன படிக்கலாம் என குழம்பி நின்றுவிடாமல். தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பே அதற்கான ஆயத்தம் செய்து கொள்ளவே இந்த முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் & பெற்றோருக்கு ஏற்படக்கூடிய சந்தேகங்களுக்கு தெளிவான முறையில் இங்கு விளக்கம் அளிக்கப்பட உள்ளார்கள்.
குறிப்பு :- மாணவர்கள் & பெற்றோர்கள் இந்நிகழ்ச்சியில் அவசியம் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இப்படிக்கு
இளைஞர் அமைப்பு
ஷம்சுல் இஸ்லாம் சங்கம், அதிரை.


Great mix of humor and insight! For more, visit: READ MORE. What do others think?