கோரிக்கைகளை ஏற்று செயல்படும் 6வது வார்டு கவுன்சிலருக்கு குவியும் பாராட்டுக்கள்!!

ஆறாவது வார்டு முகைதீன் ஜூம்ஆ பள்ளி பின்புறம் உள்ள சாலையில் மின்கம்பம் ஒன்று பாதையில் இடையூறாக இருந்து வந்த நிலையில் தெருவாசிகள் 6வது வார்டு கவுன்சிலர் அனீஸ் பாத்திமா அகமது காமில் அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர், 6வது வார்டு கவுன்சிலர் அனீஸ் பாத்திமா அகமது காமில் அவர்கள் இதனை அப்புறப்படுத்தி புதிய மின்கம்பம் சாலை ஓரத்தில் வைப்பதற்கு பல நாட்களாக முயற்சி செய்து வந்த நிலையில் இன்று (06/04/2023) இடையூறாக இருந்து வந்த மின்கம்பத்தை அப்புறப்படுத்தி சாலை ஓரத்தில் புதிய மின்கம்பம் மாற்றப்பட்டுள்ளது, இதனால் தெருவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

மேலும் செக்கடி தெரு பகுதியில் ஒரு சந்து பல ஆண்டுகளாக இருளில் மூழ்கி இருந்து வந்தது, அதனை 6வது வார்டு கவுன்சிலர் அனீஸ் பாத்திமா அகமது காமில் அவர்கள் கடந்த மார்ச் மாதம் 24 அன்று அந்த சந்திற்கு தெருவிளக்கு அமைத்துள்ளார், இதனால் இரவு நேரங்களில் தொழுகைக்காக அந்த பாதையை பயன்படுத்தும் பெண்கள் பெரியதும் கவுன்சிலர் அவர்களை பாராட்டி வருகின்றனர்.

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times