டைம்ஸ் ஆஃப் அதிரை இணைய ஊடகம் கடந்த 4 ஆண்டுகளாக தங்களின் பேராதரவோடு சிறப்பாக செயல் பட்டு வருகிறது, இதில் நம் இணையதள வாசகர்களை ஊக்குவிக்கும் விதமாக கிராஅத் போட்டி, கேள்வி பதில் போட்டி போன்ற நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம்.
மேலும் தங்களின் பேராதரவோடு எங்களின் (டைம்ஸ் ஆஃப் அதிரை) அடுத்த கட்ட முயற்சியாக world.TimesofAdirai.com என்ற புதிய இணையதள வாயிலாக அதிரை மக்களும், வெளிநாடு வாழ் அதிரை மக்களுக்கும் உலக செய்திகளை அறியப் பெற புதியதாக ஓர் இணையதளத்தை அறிமுகம் செய்கிறோம், இதன் பலனாய் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் உறவுகளுக்காக இந்த world.timesofadirai.com என்ற ஊடகம் வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள், முக்கிய நிகழ்வுகள், சட்டதிட்டங்கள், நாட்டின் நடைமுறைகள் உள்ளிட்ட பயனளிக்க கூடிய பல முக்கிய தகவல்களை உடனுக்குடன் எழிய முறையில், அழகிய தமிழில் தமிழர்கள் பயன்பெற துவங்கப்பட்டது தான் நமது World.timesofadirai.com இணையதளம் உங்களின் பேராதரவை கொண்டு இந்த முயற்சியை டைம்ஸ் ஆஃப் அதிரை இணைய ஊடகம் ஆரம்பித்து உள்ளது.
மேலும் இதுநாள் வரை பொருளாதார தேவைக்கு என விளம்பரங்களை மனமுவந்து வழங்கிய அனைத்து விளம்பர தார்களுக்கும். எங்களுக்கு சிறந்த முறையில் தொழில்நுட்ப வசதிகளை வழங்கிவரும் Weglitz மற்றும் Times of Adirai IT குழுமத்திற்கும் எல்லாவற்றிற்கும் மேலாக எங்களின் மீது அக்கறை கொண்டு செய்திகளில் வரும் பிழைகளை உரிமையோடு சுட்டிக்காட்டும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இத்தருணத்தில் எங்கள் டைம்ஸ் ஆஃப் அதிரை குழுமத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதோடு இன்று போல் என்றும் தொடர்ந்து நல்லாதரவு தந்து எங்களின் வளர்ச்சியில் உங்களின் பங்கும் இருக்கட்டும் என்று அன்போடு கேட்டு கொள்கிறோம். உறவுகளே.. நீங்கள் எங்கள் பக்கங்களை Follow செய்வதோடு உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுதிடுங்கள்.
World.timesofadirai.com என்ற இனைய செய்திகளை அறிய கீழ் கண்ட வாட்ஸ்அப் குழுமத்தில் இணைந்திடுங்கள்…
Great mix of humor and insight! For additional info, click here: READ MORE. Any thoughts?