அதிரையில் கர்ப்பம் தரிக்கும் பெண்கள் ராஜாமடத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று கர்ப கால முன்பதிவு எண்ணை பெற வேண்டிய சூழல் நிலவுகிறது. இந்த சிரமத்தை தவிர்க்கும் விதமாக அதிரையிலேயே நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அதிரை நகர மமக கோரிக்கையை முன்வைத்துள்ளது.
அதிரைக்கு (04/03/2023) சனிக்கிழமை இன்று வருகைபுரிந்த மாவட்ட ஆட்சியர் தினேஸ் பொன்ராஜ் அவர்களிடம் இதற்கான மனுவை மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் இத்ரிஸ் அகமது தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள், தமுமுக நகர செயலாளர் முகம்மது நியாஸ், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, முனைவர். சேக் அப்துல் காதர் ஆகியோர் நேரில் வழங்கி வலியுறுத்தினர். அப்போது இந்த கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறினார்.
இதனையடுத்து பேசிய இத்ரீஸ், அதிரையில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க மனிதநேய மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தும் என கூறினார். அதிரையில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமையும் பட்சத்தில் கர்ப்பினிகள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய சூழல் தவிர்க்கப்படுவதுடன் அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வும் அதிரையில் ஏற்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
What a fantastic read! The humor made it even better. For further details, check out: READ MORE. Any thoughts?