மனிதநேய மக்கள் கட்சியின் 15ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அதிராம்பட்டினம் நகர கிளையின் சார்பாக வியாழக்கிழமை 09/02/2023 அன்று மாலை 5.00 அளவில் மமக நகர அலுவலகத்தில் தொடங்கி கிழக்கு கடற்கரை சாலை வரை 10க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி நகரத் தலைவர் RM நைனா முகமது அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்.SMA சாகுல் ஹமீது மற்றும் நகர நிர்வாகிகள் ஆகியோரின் முன்னிலையிலும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சியின் நகர அலுவலகத்தில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில். மமக நகரச் செயலாளர் இத்ரீஸ் அகமது அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
அதனை தொடர்ந்து தமுமுக நகரச் செயலாளர் முகமது நியாஸ் அவர்கள் கருத்துரை வழங்கினார். பின்னர் நகர பொருளாளர் முகமது யூசுப் அவர்கள் நலத்திட்ட உதவிகளை துவங்கி வைத்தார். இறுதியாக முன்னாள் மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஷேக் அப்துல் காதர் அவர்கள் நன்றி உரை ஆற்றினார்.
மேலும் மமக நகரச் செயலாளர் இத்ரீஸ் அகமது அவர்கள் மமக அலுவலகத்தில் கொடியேற்றி சிறப்பித்தார்கள், நகரத் தலைவர் RM நைனா முகமது அவர்கள் தக்வா பள்ளி அருகில் கொடியேற்றி சிறப்பித்தார்கள், தமுமுக நகர செயலாளர் முஹம்மது நியாஸ் அவர்கள் ECR சாலை ரயில்வே கேட் அருகில் கொடியேற்றி சிறப்பித்தார்கள்.
This was both amusing and educational! For those interested, visit: EXPLORE NOW. Looking forward to the discussion!