திருச்சியில் சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் விழிப்புணா்வு கருத்தரங்கம்!!

Mohamed Zabeer
1 Min Read
V Solutions GIF

திருச்சியில் சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பில் தேசத்தந்தை காந்தியடிகளை கொடியோர்கள் கொன்றது ஏன்? காந்தி தேசம் காக்க மாபெரும் விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது, இந்நிகழ்வில் AMK ஹாலில் SMI மாநில துணைச் செயலாளர் திருச்சி அப்பீஸ் தலைமையில் நடைபெற்றது. முதலவதாக தஞ்சை தெற்கு மாவட்ட SMI பொறுப்பாளர் மதுக்கூர் ரஹ்மான் கிராத் ஓதி துவங்க SMI தஞ்சை மண்டல செயலாளர் பொதக்குடி ரியாஸ் வரவேற்புரையாற்றினாா்.

இந்நிகழ்வில் தமுமுக மாநில பொருளாளர் பொறியாளர் ஷபியுல்லாகான், திமுக மாணவர் அணியின் மாநில தலைவர் வழக்குரைஞர் இரா.ராஜீவ்காந்தி, மமக அமைப்பு செயலாளர் புதுமடம் ஹலீம், தமுமுக தலைமை பிரதிநிதி வழக்குரைஞர் நூர்தீன் ஆகியோா் கருத்துரையாற்றினாா்கள்.

இதில் தமுமுக கிழக்கு மாவட்ட தலைவர் முஹம்மது ராஜா, திருச்சி மேற்கு மாவட்ட தலைவர் பைஸ் அஹமது MC, கடலூர் மண்டல SMI செயலாளா் வி.களத்தூர் உ.முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி மற்றும் தஞ்சை மண்டலத்திற்குட்பட்ட SMI நிா்வாகிகள் மற்றும் இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இறுதியாக SMI கிழக்கு மாவட்ட செயலாளர் முகமது அலி ஜின்னா நன்றியுரையாற்றினார்.

காந்தியடிகள் தேசம் காக்க விழிப்புணா்வு கருத்தரங்கம் கருத்தரங்கம் தமிழ்நாட்டின் சென்னை, கோவை, திருச்சி மற்றும் இராமநாதபுரம் ஆகிய நகரங்களில் சமூகநீதி மாணவா் இயக்கம் SMI சாா்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Crescent Builders Ad
Share This Article
2 Comments