அமீரக தமுமுக தலைவர் அப்துல் ஹாதி அவர்களின் மகனார் ஈஷா அப்துல் ஹாதி அவர்களுக்கு திருமறை குர்ஆனை அதிக நேரம் ஓதிய மாற்றுத்திறனாளி குழந்தை என்ற தலைப்பில் உலக சாதனைக்கான பாராட்டு கேடயமும், சான்றிதழும் வழங்கும் நிகழ்ச்சி 27-01-2023 அன்று துபாய் RAMADA PLAZA ஹோட்டலில் நடைபெற்றது. EINSTEIN WORLD RECORDS என்ற அமைப்பின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டார்கள்.
ஈஷா அப்துல் ஹாதி அவர்கள் ஒரு மாற்று திறனாளி குழந்தையாக இருந்த போதும் அவர் திருமறை குர்ஆனை சரளமாக பல்வேறு உலக பிரசித்தி பெற்ற இமாம்கள் போன்று ஓதியது அனைவரையும் கண்கலங்க செய்தது. குழந்தையை பாராட்டி பேசிய பல்வேறு விருந்தினர்களும் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அத்தகைய நெகிழ்ச்சியான தருணத்தில்திருமறை குர் ஆனை அதிக நேரம் ஓதிய மாற்றுத்திறனாளி குழந்தை என்ற உலக சாதனை விருது வழங்கப்பட்டது, எல்லாம் வல்ல இறைவன் அந்த குழந்தையின் வாழ்க்கையை சிறப்பானதாக ஆக்க வேண்டும் என அனைவரும் பிராத்தனை செய்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியின் அகில இந்திய காங்கிரஸ் பேரியக்கத்தின் பிரமுகர் இதயத்துல்லா அவர்கள் கலந்து கொண்டார்கள் மேலும் (TEPA) தலைவர் பால் பிரபாகரன் அவர்களும் கீழக்கரை மஹரூப் காக்கா அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள் அமீரகத் துணைத் தலைவர் AS இப்ராஹிம் அவர்கள் தொகுத்து வழங்கிய இந்நிகழ்வில் அமீரக பொருளாளர் டாக்டர் அப்துல் காதர் துணைச் செயலாளர் முகமது கஸ்ஸாலி துபாய் மண்டல தலைவர் விகளத்தூர் உமர் பாரூக் துணைத் தலைவர் அய்யம்பேட்டை பாரூக், மண்டல செயலாளர்கள் கீழக்கரை ஜைனுல் ஆபிதீன் அடியற்கை ஷேக் தாவூத், மண்டல துணைச்செயலாளர்கள் திண்டுக்கல் கலீல் ரஹ்மான் மண்ணை அமீன் செயற்குழு உறுப்பினர் கடலூர் யாசின், சென்னை பிலால் உள்ளிட்டோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.
இறுதியாக அமீரக IWF சார்பாக ஈஷா அப்துல் ஹாதி அவர்களுக்கு பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது.
Very informative! Your insights are highly valuable. For additional details, check out: LEARN MORE. What are everyone’s thoughts?