அதிரை A.L பள்ளி உடற்கல்வி ஆசிரியை உலக சாதனை!!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 30th January 2023, 10:13 am

கடந்த 26/01/2023 அன்று பட்டுக்கோட்டை ஏனாதி ராஜப்பா கல்லூரியில் சிறார் மீன் உணர் தற்காப்பு விழிப்புணர்வை முன்னிறுத்தி 24 மணி நேரம் சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது.

பட்டுக்கோட்டையில் இந்திய சிலம்ப சம்மேளனம் துணைச் செயலாளர் ஜலேந்திரன், மனோரா ரோட்டரி கிளப் தலைவர் சிவச்சநீ திரள், அணைக்காடு சிலம்பக்கூடம் இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட சைக்கிள் அசோ சியேஷன் செயலாளர் நெப்போலி யன் வரவேற்றார்

லாரல் கல்வி நிறுவனங்களின் தாளாளர் பாலசுப்ரமணியன், ஏனாதி ராஜப்பா கலை அறிவியல் கல்லூரி செயலாளர் கணேசன் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர், தஞ்சை மாவட்ட சைக்கின் அசோ சியேஷன் தலைவர் டாக்டர் சதாசிவம், இந்திய சிலம்ப சம்மேளனம் துணைச் செயலாளர் ஜலேந்திரன், மனோரா ரோட்டரி கிளப் தலைவர் சிவச்சந்திரன் முன்னிலை வகித்தனர்

நடுவர்களாக நோபல் உலக சாதனை நிர்வாகத்தின் சிஇஓ டாக்டர் அரவிந்த் லட்சுமி நாராயணன், நிர்வாக அலுவலர் விளோத், மாநில தீர்ப்பாளர் பரணிதரன், ஹேமந்த் குமார் செய்ல்பட்டனர்

லன்ஸ் சேவையை டாக்டர் ரவி பொறுப்பேற்று செய்திருந்தார். ரோட்டரி செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்

நோபல் உலக சாதனை நிகழ்ச்சியில் தொடர்ந்து 6 மணி நேரம் உலக சாதனை செய்த பிரிவில் சிலம்பம், மான்கொம்பு மற்றும் சுருள் உள்ளிட்ட ஆயுதங்கள் பயன் படுத்தி சாதனை புரிந்த 4 பேரும் அதே பிரிவில் இரண்டு பேர் 12 ‘மணி நேர சாதனையும் புரிந்தனர். அடுத்து 12 மணி நேரம் தொடர்ந்து ஒற்றை சிலம்பம் சுழற்றி 12 பேர் சாதனை புரிந்தனர்.

இறுதியாக 24 மணி நேரம் நடந்த உலக சாதனை நிகழ்ச்சியில் ஒற்றை சிலம்பம் சுழற்றி எட்டு பேர் சாதனை புரிந்துள்ளனர் அதில் அதிரை A.L மெட்ரிகுலேசன் பள்ளியில் மூன்று ஆண்டுகளாக உடற்கல்வி ஆசிரியராக பணிபுரியும் கார்த்திகா (வயது 26) அவர்கள் 24 மணி நேரம் பிரிவில் வெற்றி பெற்று உலக சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்ற அளைவருக்கும் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற A.L மெட்ரிகுலேசன் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியை அவர்களை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் பாராட்டினர்.

Follow US

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter

error: Content is protected !!