நாட்டின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் இன்று 74 வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது.
சரியாக 7:30 மணி அளவில் துவக்கிய இந்நிகழ்ச்சியில் முதலாவதாக கிராஅத் ஹாபிழ் முஹம்மது தௌஃபீக் (இமாம் ஷாபி ஹிப்ஸ் அகாடமி) ஓதி ஆரம்பித்தார், M.F.முஹம்மது சலீம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினர், ஹாஜி முஹம்மது சாலிஹ் (சங்க தலைவர்) அவர்கள் நிகழ்ச்சியின் தலைமை தாங்கி தேசிய கோடியை ஏற்றி சிறப்பித்தார், சங்க நிருவாகிகள் முன்னிலை வகித்தனர், வழக்கம் போல் இந்த ஆண்டு மூன்று நபர்களை தேர்வு செய்து சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
முதலாவதாக அப்துல்லாஹ் இவர் சில மாதங்களுக்கு முன்பு CMP லைன்னில் மின்சாரம் தாக்கப்பட்ட மின் ஊழியரை துரிதமான முறையில் காப்பாற்றியதற்காக கௌரவிக்கப்பட்டனர்
பாய்ஸ் மற்றும் அப்துல் ஹமீது ஆகிய இருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிரையில் இருந்து லடாக் வரை சைக்கிள் மூலம் பயணம் மேற்கொண்டு 100 நாட்களில் லடாக் சென்று அதிரை திரும்பி சாதனை படைத்த இருவர்களையும் இன்று கௌரவிக்கப்பட்டனர்
மேலும் இந்த விழாவில் சபியுல்லாஹ் அன்வாரி (இமாம் கடற்கரை தெரு ஜூம்ஆ பள்ளி, பேராசிரியர் ஸலாஹியா அரபிக் கல்லுரி) அவர்கள் சிறப்புரை ஆற்றினார்
இந்த விழாவில் அதிரை மக்தப் மாணவர்கள், சங்க நிர்வாகிகள், முஹல்லா வாசிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கடந்துகொண்டனர், இறுதியாக அனைவருக்கும் இனிப்பு வழங்கி துஆ உடன் நிறைவு பெற்றது.






I enjoyed the humor in this article! For more, click here: LEARN MORE. Let’s discuss!