குருவி கரம்பயம் KVI FC கால்பந்து குழுவினரால் நடத்தப்பட்ட ஐவர் கால்பந்து தொடர் போட்டியில் நமது AFFA அணி கலந்து கொண்டு மிகசிறப்பானதொரு ஆட்டதினை வெளிப்படுத்தினர் தங்களின் அனிக்கு எதிரான முதல் போட்டியில் நட்ராஜ் மெமோரியல் தஞ்சாவூர் அணியை எதிர்த்து விளையாண்டு 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது பின்னர் ஆடிய இரண்டாவது போட்டியில் MFC மதுக்கூர் அணிக்கு எதிரான போட்டியில் இரு அணிகளும் கோல் ஏதும் போடாமல் சமநிலை முடிந்து வெற்றி தோல்வி டை பிரேக்கர் முறையில் நிர்ணயிக்கப்பட்டது இதில் 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு தயாரானது அரையிறுதியில் அத்லடிக் புல்ஸ் தஞ்சாவூர் அணியெய் எதிர்த்து கலமாடியது இந்த போட்டியில் 2 கோல் அடித்து முன்னணியில் இருக்கும் சமயத்தில் அத்லடிக் புல்ஸ் அணியினர் மிக துரிதமாக செயல்பட்டு அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து ஆட்டத்தின் போக்கை மாற்றி 2-2 என்ற அளவில் சமநிலை பெற்றனர் ஆட்ட நேர முடிவில் ஆட்டம் சமநிலையில் முடிந்து டை பிரேக்கரை சந்திக்க தயாரான அபுபக்கர் தலைமையிலான AFFA வின் காளைகள் வாடிவசலில் இருந்து புறப்பட்ட காளைகளை போன்று சிலிர்த்து நின்று பந்துகளை வெறித்தனமாக அடித்து டை பிரேக்கரில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர் பின்னர் நடை பெற்ற இறுதிப் போட்டியில் பேரை FC அணியினருடன் ஆடி 5-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று முதல்பரிசை தன்வசப்படுத்தினர் இந்த தொடரின் சிறந்த வீரராக S. ஆதிப் மற்றும் சிறந்த கோல் கீப்பராக சமீர் அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர். மிக சிறப்பாக விளையாடி நமது அணிக்கும் ஊரிற்கும் பெருமை தேடி தந்துள்ளனர்.
இன்றைய இறுதிப் போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சேதுபவா சத்திரம் முன்னாள் ஒன்றிய செயலாளர் உயர்திரு சின்னப்பா அவர்கள் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பு செய்தார்கள். வெற்றி பெற்ற AFFA அணிக்கு ஊரின் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Very well written! The points discussed are highly relevant. For further exploration, I recommend visiting: LEARN MORE. Keen to hear everyone’s opinions!