தஞ்சையில் AERIES நடத்திய கால்பந்து போட்டியில் அதிரை AFFA அணி அசத்தல் வெற்றி!!

தஞ்சாவூரில் மிகவும் பிரபலமான AERIES கால்பந்து குழு நடத்திய மாபெரும் ஐவர் கால்பந்து போட்டி 05/01/2023 அன்று துவங்கியது இதில் வழக்கம் போல் பிரபலமான அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் நமது AFFA கால்பந்து அணி அணியும் பங்கு கொண்டு விளையாடியது தான் சந்தித்த அனைத்து அணிகளையும் வெற்றி கொண்டு இன்று 07.11.2023 மதியம் நடந்த அரைஇறுதி போட்டியில் மிகவும் பலம் வாய்ந்த அத்லடிக்ஸ் புல்ஸ் அணியுடன் வாழ்வா சாவா என்று விளையாடி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் நுலைந்தது. இதன் இறுதி போட்டி இன்று மாலை நடைபெற்றது இதில் நமது AFFA அணியும் தஞ்சாவூர் அருள்தாஸ் அணியும் மோதின இறுதில் நமது AFFA அணி 0-0 என்று சமநிலையில் முடிந்து இறுதி போட்டியின் தரத்தை மேலும் மெரு கேற்றியது பின்னர் டை பிரேக்கர் என்ற அடிப்படையில் வெற்றி தோல்வி நிர்ணயம் செய்வது என்று போட்டி நடத்தும் குழுவின் அறிவிப்பை தொடர்ந்து அதற்கு தயாரான அபூபக்கர் அல்பன்னா தலைமையிலான AFFA வீரர்கள் மிக சிறப்பாக செயல்பட்டு 3-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று முதல் பரிசை தட்டி சென்று நமது அதிரைக்கு பெருமை சேர்த்துதந்தனர்.

பின்னர் இந்த தொடரின் சிறந்த வீரராக நமது AFFA அணியின் AFFA அணியின் தலைவர் அபூபக்கர் அல்பன்னா இந்த ஆண்டின் சிறந்த வீரராகவும் AFFA அணியின் கோல்கீப்பர் சமீர் அவர்கள் இந்த தொடரின் சிறந்த கோல்கீப்பராக தேர்வு பெற்று அணிக்கும் ஊரிர்க்கும் பெருமை தேடி தந்துள்ளனர், மேலும் இந்த தொடரில் நாம் விளையாடிய அனைத்து போட்டியிலும் கோல் ஏதும் வாங்கவில்லை என்று மிக்க மகிழ்சியுடன் தெரிவித்து கொள்கின்றோம்.

இன்றைய சிறப்பு விருந்தினராக இந்திய கால்பந்து அணியின் முன்னால் வீரர் அய்யா சைமன் சுந்தர் ராஜன் அவர்கள் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி விழாவை சிறப்பு செய்தார்கள் அய்யா சைமன் சுந்தர்ராஜன் அவர்கள் நமது அணியினரை அழைத்து நமது அதிரை முன்னாள் RSRC யின் வீரர்களை குறித்து கேட்டு நம்மை மகிழ்ச்சி அடைய செய்தனர் முன்னாள் அதிரையின் கால்பந்து வீரர்களை இந்த தருணத்தில் நினைவு கொண்டது நம்மை மகிழ்ச்சி அடைய செய்தது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Florancet
Florancet
5 months ago

This was both informative and hilarious! For more details, click here: LEARN MORE. What’s your take?

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
1
0
Would love your thoughts, please comment.x
()
x