அதிரை இளைஞர் என்ற பெயருடன் இயங்கிய இணைய ஊடகம் அதிரை மட்டுமல்லாது உலக செய்திகளை உங்களின் உள்ளங்கைக்கே கொண்டு வந்து சமர்ப்பித்து இருக்கின்றோம். அயலக வாழ் அதிரையர்களுக்கும், இதர பகுதி மக்களுக்கும் நமது ஊடகத்தின் வழியாக அன்றாட நிகழ்வுகளை வழங்கி ஒரு இணைப்பு பாலமாகவே இயங்கி வருகிறோம் என்றால் மிகையில்லை.
இந்தநிலையில் அதிரை இளைஞர் என்ற ஊடகத்தை மெருகேற்றி புதிய தொழில் நுட்பத்தின் ஊடாக துல்லியமாக செய்திகளை வழங்கிட உறுதிபூண்டு நமது தளத்தை டைம்ஸ் ஆஃப் அதிரை என்ற பெயர் மாற்றத்துடன் முற்றிலும் புதிய தொழில் நுட்பத்தை உள்ளடக்கிய செய்தி தளமாக மாற்றப்பட்டு சேவையாற்றி வருகிறது.
நான்காண்டு காலம் எங்களால் இவ்வளவு செய்திகளை கொடுத்திருக்க முடியுமா, என்றால் வாசகர்களாகிய உங்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால் எங்களுக்கு இது சாத்தியமாகி இருக்காது. ஆமாம்…. நான்கு ஆண்டை நிறைவு செய்த நமது டைம்ஸ் ஆஃப் அதிரை செய்தி ஊடகம் செய்திகளுக்கு மட்டுமல்லாது சமயம் சமூகம் அரசியல் வேலைவாய்ப்பு என பல துறைகளின்பால் கால் பதித்து வெற்றி கண்டிருக்கிறது. அதில் முத்தய்யப்பாக இரண்டு முறை இஸ்லாமிய சமய நெறியை இளைஞர்களுக்கு எடுத்தியம்பும் வண்ணம் மார்க்க கேள்வி-பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற/கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழுடன் கூடிய நினைவு பரிசு வழங்கியுள்ளோம். அதேபோல் உலக பொதுமறையாம் திரு-குர்ஆன் சுமந்த காரிகள் மூலம் குரல்வளம் மிக்க இளைஞர்களை கண்டறியும் நோக்கில் கிராஅத் போட்டியும், உலக இஸ்லாமிய இளைஞர்களை ஒருங்கிணைக்கும் விதமாக வளையொலி (யூடியூப்) மூலம் மாபெரும் கிராஅத் போட்டியை நடத்தி தமிழகம் தமிழ் பேசும் நல்லுலகிற்கு எமது தளத்தை கொண்டு சென்றிருக்கிறோம்.
தினமும் ஆயிரக்கணக்கான வாசகர்களுக்கு ஏமாற்றமில்லாமல் தொடர அன்றாட செய்திகளை உண்மை தன்மையுடன் வழங்கி வருகிறோம்… மேற்கூறிய அனைத்தும் எங்களால் மட்டுமா சாத்தியப்பட்டது என்றால் நிச்சயமாக இல்லை…
யார் மனிதர்களுக்கு நன்றி செலுத்தவில்லையோ, அவர் இறைவனுக்கு நன்றி செலுத்தியவராக மாட்டார். என்ற இறைவசனத்துடன் இதுநாள் வரை எங்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்கி வந்த எங்கள் TOA மூத்த நிர்வாகிகளுக்கும். குறிப்பாக இந்த கட்டமைப்பை உருவாக்க பொருளாதார தேவைக்கு என விளம்பரங்களை மனமுவந்து வழங்கிய அனைத்து விளம்பர தார்களுக்கும். வடிவமைப்பு தொழிநுட்பம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி Gulfglitz & Weglitz வரும் என்ற நிறுவனத்திற்கும். எல்லாவற்றிற்கும் மேலாக எங்களின் மீது அக்கறை கொண்டு செய்திகளில் வரும் பிழைகளை உரிமையோடு சுட்டிக்காட்டும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இத்தருணத்தில் எங்கள் டைம்ஸ் ஆஃப் அதிரை குழுமத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதோடு இன்று போல் என்றும் தொடர்ந்து நல்லாதரவு தந்து எங்களின் வளர்ச்சியில் உங்களின் பங்கும் இருக்கட்டும் என்று அன்போடு கேட்டு கொள்கிறோம்.
இன்றுடன் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உங்களின் டைம்ஸ் ஆஃப் அதிரை மூன்றாவது மெகா இஸ்லாமிய மார்க்க அறிவியல் போட்டிக்கு எங்களை தயார் செய்து கொண்டுள்ளோம்… அதற்கான அறிவிப்பு விரைவில் நமது தளம் மூலமாக வெளியிடப்படும்…..
ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைரன் கசிரன் ….
– டைம்ஸ் ஆஃப் அதிரை
This piece was both informative and amusing! For more, visit: LEARN MORE. Keen to hear everyone’s views!