அமெரிக்கவாழ் அதிரையர் மன்றத்தின் (AAF) புதிய நிர்வாகிகள் அறிமுக நிகழ்வு.

அமெரிக்கவாழ் அதிரையர் மன்றத்தின் (American Adirai Forum – AAF) 2023 – 2024 ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி நடைபெற இருந்தது. தேர்தலில் போட்டியிட விருப்ப மனு செய்திருந்த போட்டியாளர்கள் போட்டியிலிருந்து விலகிக் கொள்ள முடிவு செய்ததைத் தொடர்ந்து புதிய நிர்வாகக் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர்கள் அறிவித்தனர்.

இதைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கலிஃபோர்னியா மாகாணம் Fairfield நகரிலுள்ள இஸ்லாமிய மையத்தில் புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. அதிரைவாழ் அமெரிக்கர்கள் குடும்பத்துடன் சுமார் 130 பேர் கலந்து கொண்டனர்.

ளுஹர் தொழுகைக்குப் பிறகு சுவையான மதிய உணவு புதிய நிர்வாகிகளால் பரிமாறப்பட்டது. பின்னர் சகோ. இக்பால் சாலிஹ் அவர்களுடைய கிராஅத்துடன் கூட்டம் தொடங்கியது. டெக்சாஸ் மாகாணத்திலிருந்து வந்திருந்த சகோ. ஷேக் தாவூத் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார்.

தலைவர் : சகோ. அஹ்மத் சலீம்
துணைத் தலைவர் : சகோ. பரகத் உதுமான்
செயலாளர் : சகோ. நஜ்முத்தீன்
துணைச் செயலாளர் : சகோ. அப்துல் ஜப்பார்
பொருளார்: சகோ. அப்துல் ரவூப்

AAFன் தற்போதைய நிதி நிலையை பொருளாளர் விளக்கினார்.

AAFன் செயல்பாடுகளை மேம்படுத்துவது பற்றியும் இளைஞர்களைப் பங்கெடுக்கச் செய்வது பற்றியும் பேசப்பட்டது. உறுப்பினர்களின் சந்தேகளுக்கு பதில்கள் அளிக்கப்பட்டதுன் கூட்டம் நிறைவு பெற்றது.

கடல் கடந்து வாழும் அதிரையர் ஒருவருக்கொருவர் சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times