உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் கடந்த நவம்பர் 20 தேதி துவங்கப்பட்டு டிசம்பர் 18ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஆகையால், கத்தார் விழாக்கோலம் பூண்டுள்ளது. ரசிகர்கள் அலை அலையாய் குவிந்து வருகின்றனர். 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நவம்பர் 20 தேதி கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக துவங்கியது. இந்த போட்டிகள் அடுத்த மாதம் 18-ம்தேதி வரை நடக்க இருக்கிறது. அரபு நாட்டில் நடக்கும் முதல் உலக கோப்பை போட்டியான இதில் 32 நாடுகள் பங்கேற்று. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இந்நிலையில் இந்திய நேரப்படி நேற்று இரவு 9.30 மணிக்கு Australia and Denmark அணியினர் போட்டியிட்டனர்.
இந்நிலையில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியினை காண்பதற்கு அதிரையை சேர்ந்த முஹம்மது முஹ்ஸின் மற்றும் முஹம்மது முஃபீத் ஆகிய இரண்டு சிறுவர்கள் அதிரை பெயர் கொண்ட புகைப்படத்தை பதாகையாக தயார் செய்து கத்தார் உலக கோப்பை மைதானத்தில் பல்லாயிர மக்களின் மத்தியில் அதிரை பெயர் கொண்ட பதாகையை உயர்த்திக்கொண்டு ஆட்டத்தை கண்டு கழித்தது குறிப்பிடத்தக்கது.







Your humor added a lot to this topic! For more information, click here: FIND OUT MORE. What do you think?