அதிரை இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 26.11.2022 அன்று “கல்வி சுற்றுலா” பயணமாக வெளிவயல் ஊரில் அமைத்துள்ள ஓம்கார் அறக்கட்டளையின் ஆராய்ச்சி மையத்துக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் “கடலோர சதுப்பு நிலங்கள்” என்ற தலைப்பில் கடற்கரையின் அருகில் இருக்கக்கூடிய தாவரங்கள், விலங்குகள் பற்றிய ஆராய்ச்சி தகவல்களை ஓம்கார் அறக்கட்டளையின் இயக்குநரான திரு. பாலாஜி அவர்கள், மாணவர்கள் முன்னிலையில் பகிர்ந்து கொண்டுள்ளார். பிறகு நடைப்பெற்ற கலந்துரையாடலில் மாணவர்கள் புதிய பல செய்திகளை தெரிந்து கொண்டனர்.
அரங்கத்தின் மேற்பகுதியில் ஒரு அருங்காட்சியகம் இருந்தது. அதில் இருந்த கடல் வாழ் உயிரினங்களையும், சங்கு வகைகளையும் மாணவர்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர். அடுத்து “பாம்புகள் அறிவோம் பயம் தெளிவோம்” என்ற தலைப்பில்
திரு. சதீஷ் குமார் (அருகானுர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை, தஞ்சாவூர்) அவர்கள் உரையாற்றினார்கள். அதில் பறவை இனங்களின் வகைகள், பாம்பினங்களின் வகைகள் பற்றிய செய்திகளை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
பின்னர் அலையாத்திகாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அலையாத்தி காடுகளின் பயன் பற்றியும் தெரிந்து கொண்டார்கள். நமது பள்ளி மாணவர்களுடன் பள்ளி இயக்குநர் திரு. சாகுல் ஹமீது அவர்களும், நம் பள்ளி முதல்வர் திருமதி. மீனாகுமாரி அவர்களும், முனைவர் சிவசுப்பிரமணியம் (சுற்றுச்சூழல் கல்வி விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர்) மற்றும் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் அபுபக்கர் சித்திக் அவர்களும் கலந்துகொண்டு உள்ளார்.
இந்த கல்வி சுற்றுலா மன மகிழ்ச்சியையும், பயனளிக்கும் பல அறிய தகவல்களையும் வழங்கியதாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இது போன்ற நிகழ்ச்சிகள் இனி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் என்பதை பள்ளி நிர்வாகம் பெருமையுடன் தெரிவித்துள்ளது.
This piece was both informative and amusing! For more, visit: LEARN MORE. Keen to hear everyone’s views!