50வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராஅத் மற்றும் பாங்கு போட்டியின் வெற்றியாளர் அறிவிப்பு!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 22nd November 2022, 08:33 pm

நமது ஊரில் இயங்கி வரும் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 50வது ஆண்டு பொன்விழாவின் துவக்கமாக கடந்த 07.11.22 திங்கள் கிழமை அன்று காலை 10.30 மணி அளவில் பொன்விழாவை முன்னிட்டு கிராஅத் மற்றும் பாங்கு போட்டிகள் மாணவர்களுக்கு IHH அரங்கிலும், மாணவிகளுக்கு FHH அரங்கிலும் நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் செயலாளர் ஹாஜி தாஜுதின் அவர்கள் தலைமை தாங்கினார்கள். இதற்கு சிறப்பு விருந்தினராக சென்னை சேத்துப்பட்டு ஹழ்ரத் உமர் பாரூக் பள்ளியின் தலைமை இமாம் மௌலானா முகம்மது அஜ்ஹருதீன் யூசுஃபி அவர்களும், பெங்களூர் சயீதிய்யா மதரசாவின் ஹிஃப்ழ் பிரிவின் ஆசிரியருமான ஹாஃபிழ் காரி மஸ்வூத் அஹமது காசிமி அவர்களும் கலந்து கொண்டார்கள்.

​இந்நிகழ்ச்சியில் ஊரின் முக்கியஸ்தரர்கள், பெற்றோர்கள், பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் உறுப்பினர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் மாணவ, மாணவிகளின் திறமைகளை மிக்க பாராட்டினார்கள். இறுதியாக வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. துஆவுடன் இந்நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

​மாலையில் முஹய்தீன் பள்ளியில் மக்தப் மாணவர்களுக்கு கிராஅத் பயிற்சி, சிறப்பு விருந்தினர்கள் மூலம் அளிக்கப்பட்டது. ஜமாத்தார்கள் மற்றும் பல பள்ளிகளின் மக்தப் மாணவர்கள் பங்கேற்று பலனடைந்தனர்.

வெற்றி பெற்றவர்களின் பெயர் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிராஅத் போட்டியின் வெற்றியாளர் பட்டியல்!

GROUP A
1) Yousuf A IV – B
2) Ahamed Ameen A.N VI – A
3) Muhammad A VI – A

GROUP B
1) Mohamed Arif Z VII – A
2) Imaadh IX – A
3) Ushman A VII –A

GROUP C
1) Nazeem XII – B
2) Shaik Hamdhan M.Y XII – B
3) Mohamed Suhail F XI – B

பாங்கு போட்டியின் வெற்றியாளர் பட்டியல்!

GROUP A
1) Sahal M. I IX – A
2) Muhammad S VIII – A
3) Naleer N VII – A

GROUP – B
1) Muhamed S X – A
2) Hammadh Ismail XI – B
3) Mahmood S XII – B

பெண்கள் பிரிவில் வெற்றிபெற்றவர்களின் பெயர் பட்டியல்!

GROUP A
1) H.Zainab VI – C
2) U.Nabeeha IV – C
3) A.R.Farha V – B

GROUP B
1) M.S.suhaima VIII – C
2) M.Afiya IX – C
3) F.Ruqaiyya VII – C

Follow US

Stay Connected

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Playlist

7 Videos