நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு உத்தரவின் பெயரிலும் அதிராம்பட்டினம் நகராட்சி தலைவர் எம்.எம்.எஸ் தாஹிரா அம்மாள் அப்துல்கரீம் அவர்கள் மற்றும் துணைத் தலைவர் இராமகுணசேகரன் அவர்களின் வழிகாட்டுதல் பெயரிலும், 24வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் அப்துல் மாலிக் தலைமையில் பகுதி கிராம சபை கூட்டம் இன்று ஆறுமுகக் கிட்டங்கித் தெரு பகுதியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அதிரை நகராட்சி ஆணையர் அவர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (VAO) மற்றும் நகராட்சி பணியாளர்கள் 24வது வார்டு வடக்கு பகுதிக்கு உட்பட்ட உறுப்பினர் காதர் இப்ராஹிம், தெற்கு பகுதி உறுப்பினர் பன்னீர்செல்வம் மேலும் ஆறுமுக கிட்டங்கி தெரு தலைவர் பஞ்சாயத்தார்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.
அப்பகுதிக்கு பொதுமக்கள் சார்பாக முதன்மையான கோரிக்கையாக கிராமசபைக் கூட்டத்தில் வைக்கப்பட்டது
இக்கோரிக்கைகளை அனைத்தும் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை 24வது வார்டு அப்பகுதி உறுப்பினர் பன்னீர்செல்வம் அவர்கள் எடுத்துரைத்தார்கள்.
மேலும் விரைவில் தீர்த்து வைக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
இறுதியாக இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அதிராம்பட்டினம் நகராட்சி தலைவர் ,துணைத்தலைவர் ஆணையர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம சபை கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த 24வது வார்டு கவுன்சிலர் அப்துல்மாலிக் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
I enjoyed the humor in your piece! For further reading, check out: FIND OUT MORE. Let’s discuss!