அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்குட்பட்ட விகேஎம் ஸ்டோர் சந்திப்பு முதல் வண்டிப்பேட்டை வரையிலான சிஎம்பி லேன் பிரதான சாலை மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. மேற்படி சாலை நெடுஞ்சாலைத்துறையின் ஊரக சாலையின் கீழ் வருவதால் சாலை அமைப்பது தாமதமாகிவருகிறது.

இது பற்றி பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.அண்ணாத்துரை அவர்களை சங்கத்தின் சார்பில் சந்தித்து சிஸ்யாவின் நிர்வாகிகள் மனு அளித்தனர். முன்னாள் சேர்மனும் திமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளருமான S.H.அஸ்லம் உடனிருந்தார்.

பின்னர் நகராட்சி ஆணையரையும் சந்தித்து சிஎம்பி லேன் சாலையில் மழைக்காலத்தில் கடும் சிரமம் ஏற்படுவதை குறைக்க தற்காலிக ஏற்பாடு செய்து தருமாறும் கோரிக்கை வைத்தனர்.