தீபாவளி சிறப்பு ரயில்! அதிரை – சென்னை மாநகருக்கு அங்கீகாரம்!

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து அதிரை வழியாக ராமேஸ்வரம் செல்ல சிறப்பு ரயில் இயங்க உள்ளது.

வருகின்ற 23-10-2022 அன்று இரவு 8-45 மணிக்கு சென்னை சென்ட்ரல் (வண்டி எண் 06041) முதல் அதிவிரைவு ரயில் அதிராம்பட்டினம் வழியாக ராமேஸ்வரம் வரை சிறப்பு விரைவு ர‌யி‌ல் இயங்க உள்ளது. மேலும் இந்த ரயில் சென்னை சென்ட்ரல் சென்னை எழும்பூர் தாம்பரம் செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர் சிதம்பரம் மயிலாடுதுறை திருவாரூர் திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை பேராவூரணி அறந்தாங்கி காரைக்குடி சிவகங்கை மானாமதுரை பரமக்குடி ராமநாதபுரம் மண்டபம் வழியாக ராமேஸ்வரம் வரை இயக்கப்பட உள்ளது.

மறுமார்க்கத்தில் 24-10-2022 திங்கள்கிழமை மாலை 4-20 மணிக்கு வண்டி எண் 06042 ராமேஸ்வரத்தில் புறப்பட்டு மறுநாள் 25-10-2022 (செவ்வாய்க்கிழமை) காலை 6-20 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

நமது பகுதி மக்கள் இந்த சிறப்பு விரைவு ர‌யி‌ல் சேவைகளை பயன்படுத்தி பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

2 comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times