தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் சாலைகள் மேடும் பலமாகவும் இருந்து வருகிறது, அதனையடுத்து அதிரை காதர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு செல்லும் நுழைவில் சேரும் செவதியுமாக காணப்பட்டது, இப்பள்ளியில் சுமார் 1200 மாணவர்கள் பள்ளியில் பயணித்து வரும் நிலையில் இந்த பாதையை உடனடியாக சீர் செய்யுமாறு மாணவர்கள் இடையே கோரிக்கையாக இருந்தது.
இதனை அடுத்து பல தரப்பினர் நிர்வாகத்திடம் வேண்டுகோள் வைத்த நிலையில் டைம்ஸ் ஆஃப் அதிரை சார்பாகவும் MKN மதரஸா டிரஸ்ட் நிறுவனத்திற்கு நேற்று இரவு நேரில் வேண்டுகோள் வைத்தோம், அதனை அடுத்து இன்று அதிகாலையே உடனடியாக பள்ளிக்கு செல்லும் நுழைவு வாயில் பாதை சரி செய்யப்பட்டது.
எங்கள் வேண்டுகோளை ஏற்று உடனடியாக சரி செய்த நிறுவனத்திற்கு டைம்ஸ் ஆஃப் அதிரை சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.