தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 16 ஆண்டுகளாக இயங்கி வரும் சிட்னி கிரிக்கெட் அணியினர் இளம் வீரர்கள் மத்தியில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர், இதனை அடுத்து கடந்த அக்டோபர் 1 முதல் 10 வரை பள்ளிகளில் தேர்வு விடுமுறையை அடுத்து சிட்னி அணி சார்பாக 18 வயதிற்கும் கீழ் உள்ளவர்களுக்கு sydney premier league டௌர்னமெண்ட் WCC மைதானத்தில் நடத்தப்பட்டது.
இந்த கிரிக்கெட் தொடரில் இல் நமதூரை சார்ந்த Sydney blue, Sydney red, Wcc, Afcc, Abcc, Fsc, Pcc, Asc ஆகிய 8 இளம் வீரர்கள் கொண்ட அணிகள் பங்கேற்றனர்.
மேலும் இந்த கிரிக்கெட் தொடர் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டது.
பிரிவு 1 – sydney blue, sydney red, Wcc, Afcc
பிரிவு 2 – Abcc, Fsc, Pcc, Asc
இதனை அடுத்து அரை இறுதி ஆட்டத்திற்கு Wcc junior, Abcc Junior, sydney Junior, Asc Junior ஆகிய அணிகள் தகுதி பெற்றனர்.
இதனை அடுத்து அக்டோபர் 8ஆம் தேதி இறுதி ஆட்டம் நடைபெற இருந்த நிலையில் கடும் மழையின் காரணமாக இறுதி ஆட்டம் ஒத்தி வைக்கப்பட்டது!
அதன் பின்னர் இறுதி ஆட்டம் 16/10/2022 இன்று மதியம் சிட்னி மைதானத்தில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற Wcc அணியினருக்கும் Asc அணியினருக்கும் இறுதி போட்டி நடைபெற்றது.
இறுதி போட்டியில் டாஸ் வென்ற Asc அணியினர் பேட்டிங் ஐ தேர்வு செய்தனர், அதன் பின்னர் 15 ஓவர்களில் 86 ரன்கள் அடித்து 10 விக்கெட்களை இழந்தனர் 87 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட Wcc அணியினர் 15 ஓவர்களில் 80 ரன்கள் மட்டுமே அடித்து 8 விக்கெட்களை இழந்து தோல்வி அடைந்தனர்
இப்போட்டியில் முதல் இடம் பெற்ற ASC அணியினருக்கு 3,000 ரூபாயும் இரண்டாம் இடம் பெற்ற WCC அணியினருக்கு 2,000 ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது.
மேலும் சிறந்த மட்டை பணிக்கான பரிசு ASC அணியின் சுஹைல் அவர்களுக்கு வழங்கப்பட்டது
சிறந்த பந்து வீச்சாளர் பரிசு ASC அணியின் சந்துரு அவர்களுக்கு வழங்கப்பட்டது
Masallah super
What a great read! The humor was a nice touch. For further details, click here: READ MORE. Let’s chat about it!