தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலையில் இருந்து மழை பெய்து வருகிறது.
தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் நேற்றைய தினம் அறிக்கையில் தெரிவித்திருந்தது.
அதிரையில் கடந்த பத்துநாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் இன்று (அக்.9) அதிகாலை முதலே மழை பெய்யத் தொடங்கி தற்போது வரை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியுடன் காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
I thoroughly enjoyed this article. Its clear, concise, and thought-provoking. Anyone else have thoughts? Check out my profile!