தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அதிரை மகாதிப் சார்பாக கடந்த 4 ஆண்டுகளாக கிராஅத் போட்டி மற்றும் கிராஅத் அரங்கம் செக்கடி பள்ளி வளாகத்திலும், முகைதீன் பள்ளி அருகிலும் என பல்வேறு மாநிலங்களில் இருந்து தலை சிறந்த காரிகளை அழைத்து வரப்பட்டு கிராஅத் அரங்கம் நடைபெற்று வந்தது…
இந்த கிராஅத் போட்டியில் நமதூரை சார்ந்த பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், மதரஸாவில் ஓதும் மாணவர்கள் என 1000கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பல பரிசுகளை பெற்று இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா நோய் தோற்று காரணமாக கிராஅத் போட்டி மற்றும் கிராஅத் அரங்கம் ஊர் அளவில் நடைபெறாமல் மாதம் ஒரு முறை என்று ஒவ்வொரு மக்தபிலும் மாணவர்களை மட்டும் வைத்து நடத்தப்பட்டு வந்தது.
அதனை தொடர்ந்து இன்ஷா அல்லாஹ் வருகின்ற (04/10/2022) செவ்வாய் கிழமை அதிரை மகாதிப் சார்பாக கிராஅத் அரங்கம் அதிரை மரியம் பள்ளியில் அஸர் முதல் இஷா வரை நடைபெற இருக்கிறது.
மேலும் நமதூரில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்காக 10 இடங்களில் பகுதி நேர ஹிஃப்ளு வகுப்பு நடைபெற்று வருகிறது, இதில் இருந்து சில மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் மரியம் பள்ளியில் நடைபெற இருக்கும் கிராஅத் அரங்கில் ஓத இருக்கிறார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
பொதுமக்கள் அனைவரும் இந்த கிராஅத் அரங்கில் முழுமையாக கலந்துகொண்டு சிறப்பிக்கு மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Very engaging and funny! For more information, click here: LEARN MORE. Let’s chat!