Whatsapp Update : ஆண்ட்ராய்டு மற்றும் IOS பயன்படுத்தும் குரூப் அட்மின்களுக்கு புதிய வசதி அறிமுகம்!
குரூப் அட்மின்கள் எந்த செய்தியை வேண்டுமானாலும், நீக்க அனுமதிக்கும் அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகம் செய்திருக்கிறது. உலகின் பிரபலமான மேசேஜிங் செயலியான வாட்ஸ் ஆப் நிறுவனம் அவ்வப்போது தனது பயனர்களுக்கு புதிய அப்டேட்டை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் IOS பயனர்களுக்கு புதிய அப்டேட்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, புதிய வாட்ஸ்அப் அம்சம், குரூப் அட்மின்கள், வாட்ஸ்அப் குழுக்களை சிறப்பாக நிர்வகிக்க இந்த அப்டேட் ஐ அறிமுகம் செய்துள்ளது. புதிய வாட்ஸ்அப் குழு அம்சம் அட்மின் டெலீட் (admin delete) என்று அழைக்கப்படுகிறது…
இதன் பயன், குழு அட்மின்கள் குழுவில் வரும் தேவையற்ற செய்திகளை உடனே டெலிட் செய்யமுடியும் என தெரிவிக்கிறது
நீங்கள் புதிய WhatApp அம்சத்தைப் பெற்றுள்ளீர்களா என்பதைப் பார்க்க, நீங்கள் குரூப் அட்மினாக உள்ள ஒரு குரூப்பில் ஒரு செய்தியை நீக்க முயற்சிக்க வேண்டும். “delete for everyone” என்ற புதிய விருப்பத்தை நீங்கள் பார்த்தால், உங்கள் வாட்ஸ்ஆப் அப்டேட் செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம். ஆனால் அந்த ஆப்ஷன் வரவில்லை எனில், உங்கள் வாட்ஸ் ஆப் ஐ playstore அல்லது App store மூலம் அப்டேட் செய்துகொள்ளுங்கள்.
Your humor made this topic so engaging! For further reading, click here: DISCOVER MORE. Looking forward to the discussion!