அதிரை CMP லைனில் ஹனீப் பள்ளி எதிர்ப்புறம் உள்ள மின்மாற்றி அதற்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி பீஸ் போய் கொண்டு இருந்தது இதனால் பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர் என்பதனை மின்சார வாரியத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
நேற்றைய தினம் காலை நேரத்தில் பீஸ் போடுவதற்காக வந்த மின் ஊழியர் கவனக் குறைவின் காரணமாக மின்சாரத்தில் சிக்கிக் கொண்டதும், ஊழியரை சமூக ஆர்வலர்கள் துரிதமாக காப்பாற்றியது உடன் ஆம்புலன்ஸ் மூலம் பட்டுகோட்டை பின்னர் திருச்சிக்கு கொண்டு சிகிச்சை பெற்று வருவதும் அனைவரும் அறிவீர்கள்!
இன்று மின் ஊழியர்கள் குழு CMP லைனில் உள் பகுதியில் மின் கம்பியில் உரசிக் கொண்டு இருந்த மரக் கிளைகளை வெட்டப்பட்டு சீரான மின்சாரம் கிடைப்பதற்கு பராமரிப்பு பணிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது!
மேலும் இன்று காலையில் மின்வாரிய அதிகாரிகள் சம்பவம் நடைபெற்ற பகுதியை பார்வையிட்டு சென்று உள்ளதும் அதனை தொடர்ந்து மாலையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது!
This article had me laughing and learning! For those interested, check out: DISCOVER HERE. What’s your take?