அதிரையில் இயங்கி வரும் ஹிட்டாச்சி ATMல் எத்துனை முறை பணம் எடுத்தாலும் இலவசமா? மக்களே உசார்!

சில மாதங்களாக அதிரையில் இயங்கி வருகிறது ஹிட்டாச்சி ATM இந்த ATMல் இந்தியன் வங்கி, கனரா வங்கி போன்ற வங்கி ATM கார்டு மூலம் பணம் எத்துனை முறை எடுத்தாலும் எந்த ஒரு கட்டணமும் பிடிக்கமாட்டோம் என்று ஹிட்டாச்சி நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு ஹிட்டாச்சி ATMல் பணம் எடுக்க சென்றபோது அங்கு ஒருமுறைக்கு அதிகபச்ச தொகையாக 5000ரூபாய் மட்டுமே எடுக்க எழும் என்று எழுதப்பட்டிருந்தது, அதன் பிறகு மூன்று முறை 5000 ரூபாய் எடுத்த உடன் வங்கி கணக்கில் ரூ.24 ரூபாய் TAX என்ற பெயரில் பிடிக்கப்பட்டது தெரியவந்தது. இலவசம் என்று அறிவித்திருந்த நிலையில் அது முற்றிலும் பொய்யானது என்று நிரூபணமானது.

ஆகையால், அதிரை மக்கள் இதில் கவனமாக இருக்கமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times