ராமேஸ்வரம் – செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை டிசம்பர் வரை நீட்டிப்பு

ராமேஸ்வரம் – செகந்திராபாத் விரைவு சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது அதனுடைய சேவை டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ரயிலின் புறப்படும் நேரம், இயக்கப்படும் நாட்கள், செல்லும் வழி ஆகியவையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி ராமேஸ்வரம் செகந்திராபாத் விரைவு சிறப்பு ரயில் (07686) ராமேஸ்வரத்திலிருந்து ஆகஸ்ட் 26 முதல் டிசம்பர் 30 வரை வெள்ளிக்கிழமைகளில் காலை 08.50 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் செகந்திராபாத் – இராமேஸ்வரம் வாராந்திர விரைவு சிறப்பு (07685) ரயில் செகந்திராபாத்தில் இருந்து ஆகஸ்ட் 24 முதல் டிசம்பர் 28 வரை புதன் கிழமைகளில் இரவு 07.05 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமைகளில் இரவு 11.40 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும்.

இந்த ரயில்கள் ராமநாதபுரம், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை எழும்பூர், கூடூர், நெல்லூர், கவாலி, ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூர், சட்டெனப்பள்ளி, மிரியால்குடா, நலகொண்டா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Rameswaram – Secunderabad special train service extended till December

It was already announced that the Rameswaram-Secunderabad express special train service will be operated till August.
Now its service has been extended till December.

Also, the departure time, operating days and route of this train have also been changed.
Accordingly Rameswaram Secunderabad Express Special Train (07686) will leave Rameswaram from August 26 to December 30 on Fridays at 08.50 AM and reach Secunderabad at 12.50 PM on Saturdays.

Secunderabad – Rameswaram Weekly Express Special (07685) will leave Secunderabad from August 24th to December 28th on Wednesdays at 07.05 pm and arrive Rameswaram at 11.40 pm on Thursdays.

These trains run to Ramanathapuram, Manamadurai, Sivagangai, Karaikudi, Aranthangi, Pattukottai, Adirampattinam, Thiruthurapundi, Thiruvarur, Mayiladuthurai, Sirkazhi, Chidambaram, Tirupathitripuliyur, Villupuram, Chengalpattu, Chennai Egmore, Kudur, Nellore, Kavali, Ongole, Babatla, Denali, Guntur, Chattenapally. , Mirialguda and Nalakonda railway stations.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Naomit
Naomit
6 months ago

Great mix of humor and insight! For more, click here: READ MORE. Let’s discuss!

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
1
0
Would love your thoughts, please comment.x
()
x