மக்தபிலிருந்து ஹிப்ளு மற்றும் அரபு மதரஸா சென்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 17th July 2022, 12:06 am

கண்ணியத்திற்குரிய பெற்றோர்களே. ஆசிரியர்களே, நிர்வாக பெருமக்களே, மாணவ கண்மணிகளே! நம் அனைவரையும் அல்லாஹ் அவனுக்குரியவர்கள் என்ற கூட்டத்தில் சேர்த்து, மறுமையில் அவனது திருபொருத்தத்தை அடையக்கூடிய பாக்கியத்தை தந்தருள்வானாக! ஆமீன். மத்ரஸாக்களின் வளர்ச்சியின் ஒரு பங்கு மக்தப்களிலிருந்து தான் துவங்குகிறது. அதன் அடிப்படையில் இதுவரை நமது தீனியாத் மக்தப்களிலிருந்து மத்ரஸாக்களுக்கு சென்று ஓதி முடித்த & ஓதிக் கொண்டிருக்கும் மாணவர்கள் மற்றும் அதற்கு காரணமான பெற்றோர்கள் (ஆண்கள் மட்டும்), அவர்களுக்கு தீனுடைய கல்வி புகட்டிய ஆசிரிய பெருமக்கள், மேலும் இவை அனைத்திற்கும் ஏற்பாடு செய்து கொடுத்து மனதாலும் உடலாலும் பொருளாலும் பெரும் ஒத்துழைப்பு செய்துகொண்டிருக்கும் நிர்வாகப் பெருமக்கள் அனைவருக்குமான சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நமது செயல்பாடுகளை ஊக்கப்படுத்திக்கொள்வதற்கும் மென்மேலும் நமது மக்தப்களை வலுப்படுத்துவதற்குண்டான சிறப்பு ஆலோசனைகளை வழங்குவதற்காக சென்னையிலிருந்து மூத்த உலமாக்கள் மற்றும் பொறுப்புதாரிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். எனவே இச்சிறப்பு மிகு நிகழ்ச்சியில் பங்கேற்று அல்லாஹ்வின் அருளை பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் சென்டர்கள்:

கும்பகோணம் சென்டர்
தஞ்சாவூர் சென்டர்
அய்யம்பேட்டை சென்டர்
முத்துப்பேட்டை சென்டர்
மாயாவரம் சென்டர்
நாகை சென்டர்
மன்னார்குடி சென்டர்
அதிராம்பட்டினம் சென்டர்

நாள்: 17/07/2022 (ஞாயிற்றுக் கிழமை) துல் ஹஜ், பிறை 17, 1443

நேரம்: காலை 9:30 மணி முதல் 2:00 மணி வரை

இடம்: மத்ரஸா ஸலாஹிய்யா அரபிக் கல்லூரி, ECR ரோடு, அதிராம்பட்டினம்.

தொடர்புக்கு
ஜோனல் முஆவின் +919600315217
அய்யம்பேட்டை முஆவின் +919894994942
கும்பகோணம் முஆவின் +919994205138
முத்துப்பேட்டை முஆவின் +917339372717
அதிராம்பட்டினம் முஆவின் +919791358366

அழைப்பின் மகிழ்வில்
தமிழ்நாடு கிழக்கு ஜோன் -1 அதிரை மகாதிப் ஆசிரியர்கள் பெற்றோர்கள் நிர்வாகிகள் மற்றும் மக்தப் முன்னால் மாணவர்கள் பேரவை.


Follow US

Stay Connected

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Playlist

7 Videos