ஷம்சுல் இஸ்லாம் சங்கம் – UAE வாழ் மஹல்லாவாசிகளின் 14 ஆம் ஆண்டு குடும்ப ஒன்றுகூடல் நிகழ்வு ஐக்கிய அரபு அமீரகம் 54 ஆவது தேசியதின விடுமுறை தினமான டிசம்பர்-1, 2025 அன்று துபாய் முஷ்ரிஃப் பூங்காவில் இனிதே நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
இதில் 300 பேர் முன்பதிவு செய்திருந்தனர். குழந்தைகள், சிறார்கள், சிறுமிகள், பெண்கள் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்குமான பல்வேறு உற்சாக விளையாட்டுப் போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
காலை 10:30 மணி முதல் கூடைப்பந்து வீச்சு, ஓட்டப் பந்தயம், உள்ளே-வெளியே குதித்தல், நெல்லி கரண்டி ஓட்டம், சாக்கு ஓட்டம்,இசை நாற்காலி,மிட்டாய் சேகரம், விநாடி-வினா போட்டி ஆகிய ஒன்பது பிரிவுகளில் நடந்த போட்டிகளில் 135 பேர் கலந்து கொண்டு முப்பதுக்கும் மேற்பட்ட சிறப்புப் பரிசுகள் வழஙகப்பட்டன.
SHISWA-UAE வரலாற்றில் சுமார் 60 குடும்பங்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டது இதுவே முதல்முறை.
வாகையர்களுக்கான பரிசுகள் மட்டுமின்றி கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்து எடுக்கப்பட்டவர்களுக்கு தலா 2 கிராம் & 1 கிராம் (24 Ct.) தங்க நாணயங்கள் மெகா பரிசாக வழங்கப்பட்டன.
கலந்து கொண்ட அனைவருக்கும் சுவையான பகல் உணவு மற்றும் மாலையில் தேநீர் வழஙகப்பட்டன.
கடல்கடந்து வாழும் நாட்டில் இதுபோன்ற குடும்ப சந்திப்புகள் அனைவருக்கும் உற்சாகமாக இருந்தன. முன்னதாக ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தலைவர் பேரா. அப்துல்காதர் அவர்கள் SHISWA-UAE உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து இத்தகைய நிகழ்வுகள் தொடர வேண்டும் என்றும் வாழ்த்தி இருந்தார்கள்.
இந்நிகழ்ச்சியை சிறப்புற நடத்த உதவிய மற்றும் பரிசுகள் அன்பளிப்பு செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து மாலை மஃரிப் தொழுகைக்கு முன்னதாக இனிதே நடந்து முடிந்தது.
இப்படிக்கு,
SHISWA-UAE
01-12-2025
updated info : N. Jamaludeen (Dubai)
