டைம்ஸ் ஆஃப் அதிரை நடத்திய மார்க்க கேள்வி பதில் போட்டியின் பதில்கள் மற்றும் வெற்றியாளர் வெளியீடு!

டைம்ஸ் ஆஃப் அதிரை நடத்திய கிராஅத் போட்டியுடன் இணைந்து நடத்தப்பட்ட மார்க்க கேள்வி பதில் போட்டியில் மொத்தம் 20 கேள்விகள் கேட்டிருந்தோம் இதில் பெரும்பாலான மக்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், இந்த கேள்வி பதில் போட்டிக்குண்டான பதில்கள் பின்வருமாறு!

1)அபிஸீனியாவுக்கு இரண்டாவதாக சென்றவர்கள் எத்தனை பேர்?
101

2)சஹாபாக்களில் அதிகம் வாரிசு உரிமை சட்டத்தை பற்றி தெரிந்தவர் யார்?
ஜைது இப்னு ஹாரிஸா (ரலி)

3)ஸஹாபாக்களில் அதிகம் ஹராம் ஹலாலை பற்றி தெரிந்தவர் யார்?
முஆத் இப்னு ஜபல் (ரலி)

4)நபி (ஸல்) அவர்கள் வழிமுறையில் இல்லாத மக்களால் உருவாக்கப்பட்டதன் பெயர் என்ன?
பித்அத்

5)ஏழைகளின் தந்தை என்று அழைக்கப்படும் ஸஹாபி யார்?
ஜாஃபர் இப்னு அபூதாலிப் (ரலி)

6)நபி (ஸல்) அவர்களின் இருபதாவது வயதில் கலந்துகொண்ட போர் எது?
ஃபிஜார் போர்

7)கலிஃபா அலி (ரலி) அவர்களை கொன்றவன் யார்? இப்னு முல்ஜிம்

8)நபி மூஸா (அலை) அவர்களுடன் அல்லாஹ் பேசிய பள்ளத்தாக்கு எது?
துவா பள்ளத்தாக்கு

9)தாஹிரா என்ற சிறப்பு பெயர் யாருடையது?
கதீஜா(ரலி)

10)இஸ்லாத்தை இறுதியாக ஏற்ற இனத்தவர் யார்?
தகீப்

11)முதன்முதலில் பள்ளிவாசலில் விளக்கேற்றியவர் யார்?
தமீமுத்தாரி (ரலி)

12)பள்ளிவாசலுக்கு முதலில் மிஹ்ராப் கட்டியவர் யார்? உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்)

13)புனித கஃபாவில் போர்த்தப்படும் கருப்பு அங்கியின் பெயர் என்ன?
கிஸ்வா

14)எந்த ஸஹாபியின் தோற்றத்தில் மலக்குமார்கள் வருவார்கள்?
தஹியத்துல் கல்பி (ரலி)

15)நபி (ஸல்) அவர்களுக்கு லைலத்துல் கத்ர் இரவு மறைக்கப்பட்டது எதனால்?
இருவர் சண்டையிட்டதால்

16)நபித்துவத்தின் எந்த ஆண்டில் முஸ்லிம்கள் அபிசீனியாவிற்கு ஹிஜ்ரத் சென்றார்கள்?
ஐந்தாவது ஆண்டில்

17)அப்துல்லாஹ் இப்னு உபை யார்?
நயவஞ்சகர்களின் தலைவன்

18)மக்கா விவகாரத்தின் போது முதன் முதலில் ஓடிய குறைஷி யார்?
கிஸி இப்னு கிலாப்

19)பாலஸ்தீன சர்வாதிகாரியான ஜலூத்தை வீழ்த்திய நபி யார்?
தாவூத்(அலை)

20)நபியவர்கள் ஹிஜ்ரத் மேற்கொண்ட போது வழியில் அவரைக் கொல்ல முயன்றவன் யார்?
சுராகா இப்னு மாலிக்

டைம்ஸ் ஆஃப் அதிரை நடத்திய மார்க்க கேள்வி பதில் போட்டியின் வெற்றியாளர் பட்டியல்

முதல் இடம் – ZULFA
இரண்டாம் இடம் – ABDUL HAMEED
மூன்றாம் இடம் – MUFARRIHA

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times