குர்ஆன் கிராஅத் போட்டியாளர்களுக்கு மகிழ்ச்சியான ஓர் அறிவிப்பு!!

TIMES OF ADIRAI நடத்தும் கிராஅத் போட்டி கடந்த மே மாதம் 20ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு மொத்தம் 350+ க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பெறப்பட்டு சில தினங்களுக்கு முன்பு அனைத்து வீடியோக்களும் TIMES OF ADIRAI youtube பக்கத்தில் அப்லோட் செய்து முடிக்கப்பட்டது. இந்நிலையில், இன்ஷா அல்லாஹ் இன்னும் சில தினங்களில் போட்டியின் நிறைவு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது, தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

மேலும், TIMES OF ADIRAI நடத்திய கிராஅத் போட்டியில் (0 – 13 வயது வரை ஓரே category) எனவும் முதல் பரிசாக 6,000₹ ரூபாயும் இரண்டாம் பரிசாக 4,000₹ ரூபாயும் மூன்றாம் பரிசாக 2000₹ ரூபாயும் வழங்கப்பட இருந்தது. இந்நிலையில் போட்டியாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தியாக போட்டியாளர்களின் பலருடைய கருத்துக்களை ஆலோசனை செய்து மொத்தம் மூன்று பிரிவுகளாக (வயது வாரியாக) பிரித்து இருக்கிறோம்.

🔹(Category – 1)
▪️3 முதல் 6 வயது
6,000₹ – முதல் பரிசு
4,000₹ – இரண்டாம் பரிசு
2,000₹ – மூன்றாம் பரிசு

🔹(Category – 2)
▪️7 முதல் 9 வயது
6,000₹ – முதல் பரிசு
4,000₹ – இரண்டாம் பரிசு
2,000₹ – மூன்றாம் பரிசு

🔹(Category – 3)
▪️10 முதல் 13 வயது
6,000₹ – முதல் பரிசு
4,000₹ – இரண்டாம் பரிசு
2,000₹ – மூன்றாம் பரிசு

இவ்வாறாக வழங்கப்பட இருக்கிறோம் என்பதை போட்டியாளர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் சிறப்பாக ஓதும் 100 நபர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

மேலும் கிராஅத் போட்டியுடன் இணைந்து நடத்தப்பட்ட மார்க்க கேள்வி – பதில் போட்டியில் அதிக மதிப்பெண் எடுக்கும் முதல் மூன்று நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times