25.06.2022 இன்று அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி(ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி- தேசிய பசுமை படை மற்றும் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 – வுடன் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு விழா பள்ளியின் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் திரு.M.F.முஹம்மது சலீம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். பள்ளியின் தலைமையாசிரியை திருமதி. மீனா குமாரி தலைமையுரை ஆற்றினார். பள்ளியின் சுற்றுச் சூழல் கல்வி விழிப்புணர்வு ஒருங்கினைப்பாளர் முனைவர் ச.சிவசுப்பிரமணியம் அறிமுகவுறை ஆற்றினார். சிறப்பு விருந்தினர் முனைவர் வெ. சுகுமாரன் அவர்கள் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு அவசியம் பற்றி மாணவர்களிடம் கலந்துறையாடினார் பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மரக் கன்றுகள் , சான்றிதழ்கள் மற்றும் மஞ்சள் பை போன்றவைகள் வழங்கப்பட்டது. திரு. அப்துல் பாஸித் கிராத் ஓதினார். மாணவர் .ஹசீன் பைத் ஓதினார். மாணவர். இம்ரான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மாணவர் ரிகான் ஜக்கரியா நன்றி கூறினார்.
Very engaging and funny! For more on this topic, visit: LEARN MORE. Let’s chat!