பட்டுக்கோட்டை மின்வாரிய நகர் உபகோட்டத்திற்குட்பட்ட 110/11 கே.வி. அதிராம்பட்டினம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
முன்னதாக நாளை 23-06-2026 அன்று மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், இந்த பராமரிப்பு பணிகள் வரும் 24-06-2026 (புதன்கிழமை) அன்று நடைபெறுமாறு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வரும் புதன்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அதிராம்பட்டினம் 110/11 கே.வி. துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11 கே.வி. அதிராம்பட்டினம், கருங்குளம், ராஜாமடம், மேலத்தெரு மற்றும் புதுக்கோட்டை உள்ளுர் மின்பாதைகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
இதன் காரணமாக ஏரிப்புறக்கரை, தொக்காளிக்காடு, அதிராம்பட்டினம், கருங்குளம், ராஜாமடம், புதுக்கோட்டை உள்ளுர் மற்றும் மகிழங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அன்று மின்தடை ஏற்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


