தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் எஸ் எஸ் எம் குல் முகமது அவர்களின் நினைவாக கடந்த 21 ஆண்டுகளாக கால்பந்து போட்டி சிறப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான கால்பந்து போட்டி அதிராம்பட்டினம் கடற்கரை மைதானத்தில் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், இப்போட்டியை துவங்கி வைப்பதற்காக கடற்கரை தெரு ஜமாத் தலைவர் அகமது ஹாஜா, அதிரை நகர்மன்ற தலைவர் MMS.தாஹிரா அப்துல்கரீம் மற்றும் துணைத்தலைவர் திரு.இராம.குணசேகரன் ஆகியோர் இப்போட்டியை துவங்கி வைத்தனர் மேலும் இப்போட்டியை காண்பதற்காக ஊர் முக்கியஸ்தர்கள் விளையாட்டு வீரர்கள் பார்வையாளர்கள் என அனைவரும் வருகை தந்துள்ளனர் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்.
இன்றைய முதல் நாள் போட்டி!
கலைவாணர் 7’s கண்டலூர் VS டால்பின் FC மதுரை