அதிராம்பட்டினம் ஆரம்பத்தில் மீட்டர் கேஜ் பாதையாக இருக்கும் ரயில் பாதையில் அதிகாலையில் 6 மணிக்கு சென்னையில் இருந்து அதிரை கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து, பின்னர் காரைக்குடி செல்வதும் மீண்டும் சென்னை டு அதிரைக்கு இரவு 8 மணிக்கு வந்து சென்னைக்கு செல்வதுமாக இருந்தது அனைவரும் அறிவீர்கள்!
அப்பொழுது வருட வருடம் புனித ஹஜ்ஜுக்கு நமது ஊரில் இருந்து புறப்படும் பொழுது அதிகமாக அதிரையில் இருந்து இரயில் மார்க்கமாக சென்னை செல்வார்கள்,
அப்பொழுது நமது ஊர் ரயில்வே ஸ்டேனுக்கு உறவினர்கள் மற்றும் பொது மக்கள் என புனித ஹஜ்ஜுக்கு செல்பவர்களை வழி அனுப்பி வைப்பதற்காக பெருங் கூட்டமாக வந்து நல்ல முறையில் வழி அனுப்பி வைப்பார்கள் அத்துடன் ரயில் வண்டி புறப்படும் பொழுது பாங்கு சொல்லி முடியும் வரையிலும் அனைவரும் அமைதியுடன் இருந்து பின்னர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வீட்டிற்க்கு செல்வார்கள்.
அதே போல் புனித ஹஜ்ஜை முடித்து சென்னையில் இருந்து ஊருக்கு வருகின்ற பொழுதும்
ஹாஜிகளை வரவேற்க நமது ஊர் ரயில்வே ஸ்டேஷனுக்கு அதிகாலையிலே பொது மக்கள் மற்றும் உறவினர்கள் என வரவேற்க வந்து விடுவார்கள்.
ரயில் வந்ததும் ஹாஜிமார்களை வரவேற்று அவர்களை சலவாத்துகளுடன்
ரயில்வே ஸ்டேஷனில் இருந்து (ஆண்) ஹாஜியார்களை புகாரி ஷரீப் நடைபெறும் ஜாவியா விற்க்கு நடைப் பயணமாக நடந்து வருவார்கள்!
குதிரை வண்டி சத்தங்களாக இருக்கும்.
(அதிரை வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வு!)
ஒவ்வொரு வருடமும் ஹஜ் கமிட்டி மூலம் செல்பவர்கள் சென்னையில் இருந்து தான் செல்வார்கள்.
ஆனால் இந்த 2022 வருடம் கேரளா மாநிலம் கொச்சின் விமான நிலையத்திலிருந்து தான் தமிழ் நாட்டில் ஹஜ் கமிட்டி மூலம் செல்லும் 1500 பேர் புனித ஹஜ்ஜுக்கு செல்கிறார்கள்.
அதேபோல் நமது ஊரில் இருந்தும் புனித ஹஜ்ஜுக்கு பல்வேறு குழுக்களாக பல்வேறு தேதியில் சென்று கொண்டு இருக்கிறார்கள்.
இன்று நமது ஊரில் புனித ஹஜ்ஜுக்கு செல்லும் குழு சிறப்பு எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் தொடர் வண்டியில் அதிரையில் இருந்து கொச்சின் செல்கிறார்கள்.
அவர்களுக்கு உறவினர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் புனித ஹஜ்ஜுக்கு செல்பவர்களை சிறப்பாக வழியனுப்பி
வைத்தும்,
ரயில் புறப்படும் பொழுது பாங்கு சொல்லியும் வழியனுப்பி வைத்தது மிக சிறப்பு!!
நீண்ட இடைவெளிக்கு பிறகு நடைபெற்ற நிகழ்வு!
ஆங்காங்கே பாங்கு சத்தங்களால் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது!
அதிரை வரலாற்றில் ஓர் ஏடு!!
இதே ரயிலில் மொத்தம் 15 பேர் புனித ஹஜ்ஜுக்கு சென்று உள்ளார்கள்!
அனைவருடைய ஹஜ்ஜையும் எல்லாம் வல்ல இறைவன் கபூல் செய்வானாக.. ஆமீன்.
அகலப்பாதையாக மாற்றம் செய்து அதிரை ரயில்வே ஸ்டேஷனில்
சிறப்பு தொடர் வண்டியில் புனித ஹஜ்ஜுக்கு செல்லுவது 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நினைவூட்டல்களாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது!!