அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 99 வது மாதாந்திர கூட்டம்

நிகழ்ச்சி நிரல்:-

கிராஅத் : சகோ. நெய்னா முகமது (ஒருங்கிணைப்பாளர்)

முன்னிலை : சகோ. S.சரபுதீன் (தலைவர்)

வரவேற்புரை : சகோ. P.இமாம் கான் (கொள்கை பரப்பு செயலாளர்)

சிறப்புரை : சகோ. அஸ்ரப் (துணை தலைவர்)

அறிக்கை வாசித்தல் : சகோ. ஷேக் மன்சூர் (துணை செயலாளர்)

நன்றியுரை : சகோ. சாதிக் அகமது (இணை தலைவர்)

தீர்மானங்கள்:

1) கடந்த வருடங்களைப்போல் இன்ஷா அல்லாஹ் இவ்வரிடமும் ABM-ன் தலைமையகம் மூலம் கூட்டுக்குர்பானி திட்டத்தின் படி RS.2400/- என்பதான தகவலை அங்கிருந்து வந்த நோட்டிஸ் வாசிக்கப்பட்டு, 117-ரியால் என முடிவு செய்யப்பட்டு அதற்கான பங்கு தாரர்கள் சகோ.அப்துல் மாலிக் தொடர்பு கொண்டு பெயர்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

2) பைத்துல்மால் மூலம் செம்மையாக செயல்பட்டு வரும் கூட்டுக்குர்பானி, தனி நபர் குர்பானி இவைகளுக்கு முழு ஆதரவும் ஒத்துழைப்பும் நல்குமாறு நமதூர் வாசிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

3) அல்ஹம்துலில்லாஹ் இவ்வரிடமும் ABM ரியாத் கிளை சகோதரர்களின் உதவியினால் சாந்த+பித்ரா+ரமலான் கிட், சதக்கா ஒரு கணிசமான தொகையை உதவிய அனைவர்களுக்கும் இக்கூட்டத்தில் நன்றி தெரிவித்து இது போன்று என்றென்றும் ஆதரவும், பொருளாதார உதவியும் நல்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

4) கடந்த நோன்பில் ஏழைகளின் உதவித்திட்டமான ரமலான் கிட் மற்றும் பித்ரா விநியோகித்ததை சிறப்பாக சரியான நேரத்தில் செயல்படுத்திய தலைமை பொறுப்புதாரிகளை இக்கூட்டத்தில் நன்றியினையும் பாராட்டையும் தெரிவிக்கப்பட்டது.

5) புதிய பொறுப்புதாரிகள்:

ரியாத் கிளையின் புதிய செயலாளராக சகோ.A.நிஜாமுதீன் அவர்களும் மேலும் ஆலோசகராக சகோ.A.ரியாஸ் அகமது அவர்களும் புதிய பொறுப்புதாரியாக அனைவரும் முன்னிலையில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் அவர்கள் இருவரும் புதிய பொறுப்பை ஏற்று சிறப்பாக செயல்படுவதற்கு இக்கூட்டத்தில் துஆ செய்யப்பட்டது.

6) இன்ஷா அல்லாஹ் அடுத்த 100-வது அமர்வு JULY மாதம் 1-ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறும். அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்பட்டு கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

ஜஸாக்கல்லாஹ் ஹைரன்

Prayer Times