
தமிழக முன்னால் முதல்வர், திரு.மு.கருணாநிதி அவர்களின் 99 வது பிறந்தநாள் தினத்தை இன்று அதிராம்பட்டினம் நகர திமுக சார்பாக கொண்டாடப்பட்டது. நகர செயலாளரும் அதிராம்பட்டினம் நகராட்சி நகர் மன்ற தலைவர்,MMS. தாஹிரா அப்துல்கரீம் மற்றும் துணை தலைவர் இராம குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் நகரின் 27 வார்டுகளிலும் திமுக கொடி ஏற்றப்பட்டு வார்டுகளின் முக்கிய வீதிகளில் மரக்கன்றுகளும் நடப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நகர கழக நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், பொது மக்கள்கள் திரளாக கலந்து கொண்டு சிற்ப்பித்தனர்.

