தென்னக (கேரளா) ரயில்வே 13 ம் வருடங்கள் கடந்து எர்ணாகுளம் செங்கோட்டை காரைக்குடி பட்டுக்கோட்டை அதிராம்படினம் வழியாக வேளங்கன்னி வரை வாரம் ஒரு முறை சிறப்பு ரயிலை இயக்க முடிவு செய்து அட்டவனையும் இனைக்கப்பட்டுள்ளது. அதிராம்பட்டினத்தில் 2 நிமிடம் நிறுத்தம் தரப்பட்டுள்ளது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். இந்த வருடம் ஹஜ் கமிட்டி மூலமாக பயணிக்க வேண்டியவர்கள் கொச்சி விமான நிலையம் மூலமாகவே பயணிக்க இந்த ரயில் சேவை பயனுள்ளதாக இருக்கும். சுற்றுலா செல்ல இருப்பவர்கள் இந்த ரயிலை பயன்படுத்தி அதிக பயன்பாட்டை ரயில்வே நிர்வாகத்த்திற்கு எடுத்துக்காட்டலாம். இதற்காக பெரிதும் முயற்சி மேற்கொண்ட திரு சுரேஷ் கேரள MP அவர்களை மனதார பாராட்டுகிறோம்.கூடிய விரைவில் சென்னை காரைக்குடி செங்கோட்டை ரயில் சேவை தொடங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்த ரயில் வாரம் ஒருமுறை ஸ்பெஷல் வண்டியாக இயக்கப்படுகிறது. இரண்டு மாதங்கள் கழித்து வாரமிருமுறை நிரந்தர வண்டியாக இயக்கப்படும்.
(அனைத்து சனிக்கிழமைகளும் புறப்பட்டு)
எர்ணாக்குளம் 12.35
கோட்டயம் 13.43
கொல்லம் 16.30
செங்கோட்டை 20.00
காரைக்குடி 1.10
பட்டுக்கோட்டை 02.22
அதிராம்பட்டினம் 2.40
திருவாரூர் 4.25
வேளாங்கண்ணி 5.50
(அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் சேரும்)
(அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் புறப்பட்டு)
வேளாங்கண்ணி 18.30
திருவாரூர் 20.30
அதிராம்பட்டினம் 21.40
பட்டுக்கோட்டை 21.57
காரைக்குடி 23.25
செங்கோட்டை 04.20
கொல்லம் 8.30
கோட்டயம் 10.33
எர்ணாக்குளம் 12.00
(அனைத்து திங்கட்கிழமைகளிலும் சேரும்)