தேதி:17.5.22
புதுமனை தெரு ஐந்தாவது லைனில்
ஹனீப் பள்ளியில் இருந்து இரண்டாவது மின்கம்பம் மிகவும் ஆபத்தான நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக சாய்ந்து கொண்டு வருகிறது.
மேலும் அதன் அடிப்பகுதியில் தெரிப்புகள் விட்டுக் கொண்டு வருகிறது.
இதனால் எந்த நேரத்திலும் பழுது (கிழே விழலாம்) ஏற்படலாம் என்றும் அப்பகுதியில் உள்ளவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி , பள்ளிக்கூடத்திற்கு செல்லும் முக்கிய சாலையாகவும் , அருகில் உள்ள ஹனீப் பள்ளிக்கு முக்கிய சாளையாகவும் உள்ளது.
மேலும் அடிக்கடி மின் கம்பி அறுந்து கிழே ரோட்டில் விழுவதும் இதே பகுதியில் தான் அதிகமாக நடைபெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது!
ஆகவே காலதாமதம் செய்யாமல் துரிதமாக
பழைய மின்கம்பதை அகற்றம் செய்து புதிய மின்கம்பம் நடுவதற்கு மின்சார வாரியம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் பொது மக்களின் வேண்டுகோள்!
மேலும் பல பகுதிகளில் மின்கம்பி தாழ்வாக உள்ளதால் சிறிய காற்று அடித்தாலும் இரண்டு மின்கம்பிகள் உரசிக் கொள்வதால் அடிக்கடி பீஸ் போய் விடுகிறது.
சில நேரங்களில் மின்கம்பி அறுந்து ரோட்டில் விழுகிறது.
இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படா வண்ணம் மின்சார வாரியம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சீரான மின்சாரம் அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்றும் பொது மக்களின் வேண்டுகோள்!