அதிரையில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டித்தர வேண்டி மாநிலங்களவை உறுப்பினரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு

அதிராம்பட்டினம் நகராட்சியில் உள்ள நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 82 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது இப்பள்ளியின் கட்டிடங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கஜா புயல் இயற்கை சீற்றத்தில் முற்றிலுமாக சேதமடைந்து விட்டது கடந்த காலங்களில் 160 மாணவர்களுடன் செயல்படுத்த இப்பள்ளி 2020 – 2021 கல்வியாண்டில் 401 மாணவர்கள் இப்பள்ளியில் கல்வி கற்கிறார்கள்

இடம் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு திமுக மாநிலங்களவை உறுப்பினர் உயர்திரு M M அப்துல்லா அவர்களிடம் சிறுபான்மையினர் அதிகமாக பயிலும் இப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அதிராம்பட்டினம் நகராட்சித் துணைத் தலைவரும் அதிரை திமுகழக நகரச் செயலாளருமான இராம குணசேகரன் அவர்கள் தலைமையில் 8 வது வார்டு திமுக செயலாளரும் நகரமன்ற உறுப்பினருமான இன்ஜினியர் அபுதாஹீர், 12 வது வார்டு திமுக செயலாளரும் நகராட்சி உறுப்பினருமான ராலியா சைபுதீன், அதிரை நகர திமுக செயற்குழு உறுப்பினரும் முன்னாள் கவுன்சிலர் இன்ஜினியர் இப்ராஹிம் ஆகியோர், மே 9, 2022 நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்

கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட மாநிலங்களவை உறுப்பினர் உயர்திரு M M அப்துல்லா அவர்கள் கனிவுடன் பரிசீலித்து கூடிய விரைவில் ஆவன செய்வதாக கூறியிருக்கிறார்கள் எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி கூறி விடை பெற்றுக் கொண்டோம்.

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders