அதிரை நகர திமுக சார்பாக ஈகைத் திருநாள் வாழ்த்து கூறிய நகர நகராட்சித் தலைவர், துணைத் தலைவர், கழக உறுப்பினர்கள் (வீடியோ இணைப்பு)

நாளை மே 3, 2022 தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்களால் நோன்புப் பெருநாள் சிறப்பாக கொண்டாட ஆயத்தமாகி வரும் வேளையில் அதிராம்பட்டினம் திமுகழக நகரச் செயலாளர் இராம குணசேகரன், நகராட்சித் தலைவர் எம் எம் எஸ் தாஹிரா அம்பாள் அப்துல் கரீம், மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கழக பிரதிநிதிகள் உடன்பிறப்புக்கள் ஒன்றிணைந்து நோன்புப் பெருநாள் வாழ்த்து செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்

வாழ்த்து செய்தி

இறைவனுக்காக இறையச்சத்துடன் 30 நாட்கள் நோன்பிருந்து ஏழைகளின் பசியை உணர்ந்து இந்த புனிதமான மாதத்தில் ஏழைகளுக்கு உங்கள் செல்வங்களை அள்ளி கொடுத்து இன்புறச் செய்து ஈகைத் திருநாள் முதல் நாளும் ஃபித்ரா தர்மத்தை கொடுத்து ஈகைத் திருநாளில் எல்லோரும் இன்புற்று மகிழ அள்ளிக் கொடுத்து அதிரையில் மத சகோதரத்துவத்தை பேணிக்காக்கும் நமதூர் என்றும் சகோதரத்துவத்தின் முன்னோடி என்பதை தமிழக மக்களுக்கு எடுத்துக்கூறும் அதிரை இஸ்லாமிய சகோதரர்கள் அத்தனை பேர்களுக்கும் எனது சார்பாகவும் நகர திமுகழகத்தின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியுடன் நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களை கூறிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

வீடியோ இணைப்பு ⬇️

Prayer Times