அதிரை சுரைக்காய் கொல்லை பகுதியில் புதிய நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு.

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட விரிவாக்கப்பட்ட பகுதியான சுரைக்காய் கொல்லை பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்காக நகராட்சி பொது நிதி திட்டத்தின் மூலம் புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு சுமார் 100 குடும்பங்களுக்கு மேல் இருக்கும் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக இன்று அர்ப்பணிக்கப்பட்டது

நகராட்சி ஆணையர் மா, சசிகுமார் தலைமையில் நகராட்சி துணைத்தலைவர் இராம குணசேகரன் அவர்களும், 3 வது வார்டு நகரமன்ற உறுப்பினர் திருமதி கீர்த்திகா ராஜா இருவர் முன்னிலையில் அதிராம்பட்டினம் நகராட்சி தலைவர் எம் எம் எஸ் தாஹிரா அம்மாள் அப்துல்கரீம் அவர்கள் மரக்கன்று நட்டு நீர்த்தேக்கத் தொட்டியை திறந்துவைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்கள்

இந்நிகழ்ச்சியில் S I தமிழ்வாணன் ஒன்றிய சிறுபான்மை அமைப்பாளர் மரைக்கா K இத்ரீஸ் அஹமது நகராட்சி வார்டு கவுன்சிலர்கள் மற்றும் திமுக பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்

குறிப்பு : நீர்த்தேக்க தொட்டியில் அமைக்கப்பட்ட கல்வெட்டில் அனைத்து வார்டு உறுப்பினர்களின் பெயர்களை கல்வெட்டில் இடம் பெறச் செய்து அதிரை மக்களின் முன்னேற்றத்திற்காகவும் நலனுக்காகவும் ஒற்றுமையை நாடி நாங்கள் எப்பொழுது முன் நிற்பவர்கள் என்பதை நகராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் உறுதி படுத்தியிருக்கிறார்கள்

Prayer Times