மரியம் பள்ளி பின்புறம் உள்ள மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க களத்தில் இறங்கிய 9வது வார்டு கவுன்சிலர் அப்துல் கலீம் மற்றும் ஒன்றிய சிறுபான்மை அமைப்பாளர் மரைக்கா K இத்ரீஸ் அகமது
அதிராம்பட்டினம் நகராட்சி 9வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான மறைக்க குளம் கரைப்பகுதி மரியம் பள்ளி பின்புறத்தில் குடியிருக்கும் மக்களின் குடிநீர் பிரச்சனை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது மக்களின் கோரிக்கையை ஏற்று அப்பகுதியை ஆராய்ந்த பொழுது குடிநீர் செல்லும் மெயின் பைப் லைன் குடியிருப்பு வாசிகளுக்கு சுமார் 200 மீட்டர் தொலைவில் இருப்பதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு அதிரை நகராட்சியின் குடிதண்ணீர் இணைப்பு பெறுவதற்கு கூடுதல் செலவாகும் என்பது கண்டறியப்பட்டது
அப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க குறைந்த செலவில் குடிநீர் இணைப்பு பெற குடியிருப்புகள் உள்ள பகுதியில் புதிதாக குடிநீர் மெயின் பைப் லைன் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று இன்று ஏப்ரல் 21 2022 இன்று அதிரை நகராட்சியின் துணைத் தலைவர் இராம குணசேகரன் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது
கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட அதிரை நகராட்சி துணைத் தலைவர் இராம குணசேகரன் அவர்கள் நகராட்சி தலைவர் மற்றும் நகராட்சி ஆணையருடன் கலந்து கனிவுடன் பரிசீலித்து கூடிய விரைவில் ஆவன செய்யப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்கள்
மனு அளிக்கும் பொழுது ஒன்றிய சிறுபான்மை அமைப்பாளர் மரைக்கா K இதிரீஸ் அகமது அவர்களும் 20 ஆவது வார்டு கவுன்சிலர் சகோதரர் பகுருதீன் அவர்களும் உடன் இருந்தார்கள்