அதிராம்பட்டினம் நகராட்சி நிர்வாகம் வரிவிதிப்பை வெளிப்படையாக அறிவிப்பு செய்யாமல் இருப்பதன் ரகசியம் என்ன?
மக்களுக்காக நல்லாட்சி தருகிறோம் என்று கூறிக்கொண்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் மேலும் சுரண்டுவது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும் ?
மக்களுக்கான நல்லாட்சி எனக் கூறிக்கொள்ளும் அரசு மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் வரி உயர்வை கொண்டு வந்து மக்களை வதைக்க முற்படுவது ஏன்?
மக்கள் வரிப்பணத்தில் தான் நகராட்சி இயங்கி வருகிறது. எனவே மக்கள் நலனை புறக்கணித்து சுரண்டலில் ஈடுப்பட முயலாமல் அறிவிப்பை ஒளிவு மறைவின்றி வெளியிட்டு வரிகளை மறு சீராய்வு செய்ய முற்பட வேண்டும்!!
அறிவிப்பு வெளியிட்ட நாளிலிருந்து 30 நாட்கள் கால அவகாசம் வழங்கி மக்களை பாதிக்காத வகையில் வரிகளை நிர்ணயம் செய்திட வேண்டும்.
வெறுமனே நல்லாட்சி எனக் கூறிக் கொள்வதில் மக்களுக்கு எந்த விதமான பிரயோசனமும் இல்லை நல்லாட்சி என்பது மக்கள் நலனில் அக்கறை கொண்டு மக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் செயல்படுத்துவது தான் …
இப்படிக்கு,
SDPI கட்சி
அதிரை நகரம்
தஞ்சை தெற்கு மாவட்டம்
Insightful read! I found your perspective very engaging. For more detailed information, visit: READ MORE. Eager to see what others have to say!