நமதூரில் அவ்வப்போது புதுமனைகள் புதியதாக உதயமாவதும் அதனால் மக்கள் படும் இன்னல்களும் சொல்லி மாலாது!.
புது வீடு கட்டி குடி புகுவது என்பது அனைவருக்கும் பொதுவாக உள்ள வாழ்க்கையின் முக்கிய ஆசையாக காணப்படுகிறது!.
அதுபோல,நமதூரில் வீடு கட்டுவோர் பாதுகாப்பு முறைகளை பின்பற்றி, அண்டை வீட்டாருக்கு தொல்லை கொடுக்காத வண்ணம் வீடு கட்டி குடி புகு’கிறார்களா என்றால்!..கேள்விக்குறியே?..
பாதையில் கம்பி,மணல்,ரப்பீஸ் போன்ற கட்டுமான பொருட்களை சாலையில் சிதறடித்து மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்ப்படுத்தும் வகையில் நமதூர் மக்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
இதில் வருந்ததக்க விஷயம் என்னவென்றால், நமதூர் கட்டுமான பொறியாளர்களே இம்மாதிரியான மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் அசம்பாவிதங்களை நடைமுறை படுத்துகின்றனர்,
குறிப்பாக ரூப் கான்கிரீட் போடும் சமயம் ஒரு சாலையையே அடைத்து வைத்துவிட்டு அவசர ஊர்தியான ஆம்புலன்ஸ்’இர்க்கு கூட வழி விடாமல் நான் பொறியாளன் அப்படி தான் செய்வேன் என மார்த்தட்டி மக்களின் கடுஞ்சொர்களுக்கு ஆளான பொறியாளனும் நம் முஹல்லாவை சேர்ந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது!..
இனிவரும் காலங்களிலாவது மக்களுக்கு இடையூறு ஏற்படாதவாரு கட்டுமான பணிகளை நமதூர் பொறியாளர்’கள் மற்றும் வீட்டு உரிமையாளர்’ கள் பாதுகாப்பு பணிகளை மேற்க்கொள்வார்களா?.என எதிர்பார்க்கப்படுகிறது!..
Very engaging and funny! For more information, click here: LEARN MORE. Let’s chat!