தமிழ் கூறும் நல்லுலகிற்கு தூய திருக்குர்ஆன் தமிழாக்கத்தை வழங்கிய முதுபெரும் ஆலிம்களான மர்ஹூம் மௌலானா M. அப்துல் வஹ்ஹாப், மர்ஹூம் மௌலவி K.A. நிஜாமுத்தீன் மன்பஈ மற்றும் மர்ஹூம் மௌலவி ஹாபிழ் R.K. அப்துல் காதிர் பாகவி ஆகியோரின் எளிய தமிழாக்கத்தில் வெளிவந்த 'ப்ளூ தர்ஜமா' வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்றாகும். டெம்மி, கிரவுன், பாக்கெட் சைஸ் எனப் பல்வேறு பதிப்புகளில் ஏற்கனவே வெளியாகி நன்மதிப்பைப் பெற்றுள்ள இத்தர்ஜமா, தற்போது தமிழ் மொழியிலேயே முதல்முறையாக 30 ஜூஸ்வுகளும் தனித்தனி பாகங்களாகக் கொண்ட ‘செட் குர்ஆன் தர்ஜமா’ வடிவில் புதிய அறிமுகமாக வெளியாகியுள்ளது.
இப்புதிய பதிப்பானது டெம்மி 1×8 (5.5" x 8.5") அளவில், மிகக் குறைந்த எடையில் நேர்த்தியான மற்றும் அழகிய தோற்றத்தில் அச்சிடப்பட்டுள்ளது. 15 வரி (ஹிஃப்ழு) அரபி மூலத்துடன் கூடிய இந்த தர்ஜமா, எடை குறைவாக இருப்பதால் நீண்ட நேரம் கைகளில் வைத்து ஓதுவதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், வெளியூர் பயணங்கள் மேற்கொள்வோர் மற்றும் ஹஜ், உம்ரா செல்பவர்கள் தங்களுக்குத் தேவையான ஜூஸ்வுகளை மட்டும் எளிதாக எடுத்துச் சென்று ஹரம் ஷரீபில் வைத்து பொருளுடன் ஓதி முடிக்க இது பெரும் வாய்ப்பாக அமையும்.
வாசிக்கும் பழக்கம் குறைந்துவரும் இக்காலகட்டத்தில், மக்கள் குர்ஆனோடு தொடர்ந்து தொடர்பில் இருப்பதற்கு உந்துதலாக அமைந்துள்ள இந்த 30 ஜூஸ்வுகள் கொண்ட முழு செட்டின் ஹதியா விலை ₹1,300/- ஆகும். இப்புத்தகத்தை சென்னை த்ரீயெம் பப்ளிஷர்ஸ் (Threeyem Publishers) வெளியிட்டுள்ளது. இதனைப் பெற விரும்புவோர் 044 42166729, 98403 61227 ஆகிய எண்களிலோ அல்லது www.threeyem.in என்ற இணையதள முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Comments (0)
No comments yet.
Write a comment