பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான கால்பந்து போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. திருச்சி, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மண்டலங்களைச் சேர்ந்த ஜமால் முகமது கல்லூரி, புனித வளனார் (செயின்ட் ஜோசப்) கல்லூரி, நேஷனல் கல்லூரி, பிஷப் ஹீபர் கல்லூரி, ஏ.வி.வி.எம் ஸ்ரீ புஷ்பம் கல்லூரி (பூண்டி), ஈ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி உள்ளிட்ட 16-க்கும் மேற்பட்ட முன்னணி கல்லூரி அணிகள் இத்தொடரில் பங்கேற்றன 

கடுமையான போட்டிகளுக்கு இடையே அபாரமாக ஆடிய அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி அணி, தொடரில் 3-ஆம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.  

முன்னதாக, கடந்த மாதம் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளிலும் அதிரை காதிர் முகைதீன் கல்லூரி அணி முதலிடம் பிடித்து சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

தொடர்ந்து அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து கல்லூரிக்கும் அதிரை மண்ணிற்கும் பெருமை சேர்த்த கல்லூரி கால்பந்து அணியின் வீரர்களையும், அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநரையும் கல்லூரி நிர்வாகம், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.