அதிராம்பட்டினம் மரைக்காயர் பள்ளியில், மத்ரஸதுந்நூர் புதிய கட்டிட திறப்பு துஆ மற்றும் 18 ஹாஃபிழ்களுக்கு பட்டம் (ஸனது) வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி வரும் திங்கட்கிழமை (19-10-2026) அன்று காலை 9:30 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு அதிரை மத்ரஸா ரஹ்மானிய்யா முதல்வர் மௌலானா, மௌலவி முஹம்மது குட்டி ஹழ்ரத் கிப்லா அவர்கள் தலைமை வகிக்கிறார். அதிரை உலமாக்கள் மற்றும் அதிரை அனைத்து மஸ்ஜித் நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர்.
சென்னை மத்ரஸா காஷிஃபுல் ஹுதா பேராசிரியர் மௌலானா, மௌலவி, அல்ஹாஜ் அப்துல்லாஹ் மக்கீ காஷிஃபி, காஸிமி ஹழ்ரத் அவர்கள் சிறப்புப் பேருரை ஆற்றுகிறார். தொடர்ந்து, தமிழ்நாடு அமீரே ஷரீஅத் மற்றும் சென்னை மத்ரஸா காஷிஃபுல் ஹுதா முதல்வர் மௌலானா, மௌலவி, அல்ஹாஜ் அப்துல் மஜீத் பாகவி ஹழ்ரத் அவர்கள் புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்து, சனது வழங்கி ஆசியுரை மற்றும் துஆ செய்கிறார்.
இன்ஷா அல்லாஹ், சரியாக காலை 10:00 மணிக்கு கட்டிட திறப்பு துஆ நடைபெற்று, அதைத் தொடர்ந்து சிறப்புப் பேருரை, பட்டம் வழங்கி ஆசியுரை வழங்கப்பட்டு, மதியம் 12:00 மணிக்கு துஆவுடன் நிறைவு பெறும். இறுதியாக அல்ஹாஜ் மக்கத்தம்பி காக்கா அவர்கள் நன்றியுரை ஆற்றுகிறார்.
இச்சிறப்புமிகு மார்க்க நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் அனைவரும் திரளாகக் கலந்துகொண்டு வல்ல அல்லாஹ்வின் அருளைப் பெறுமாறு மத்ரஸதுந்நூர் (அதிராம்பட்டினம்) மற்றும் மத்ரஸதுல் மதீனா (படப்பை - சென்னை) நிர்வாகத்தினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.



Comments (0)
No comments yet.
Write a comment